சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

நீங்க என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா.? தளபதி பட நடிகையை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!

கடந்த ஒரு வாரமாக தளபதியின் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களுக்கு ஏதாவது சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதேபோல் ஜூன் 22 ஆம் தேதி செகண்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் தளபதி விஜய்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் படம் தான் பீஸ்ட். இந்த படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர் மத்தியில் அதிகரித்துக் கொண்டே தான் போகின்றது. தளபதிக்கு ஜோடியாக நடித்துள்ள பூஜா ஹெக்டே தற்போது இந்திய அளவில் பிரபலமாகி விட்டார்.

pooja-hedge
pooja-hedge

ஆனாலும் கூட தளபதியின் ரசிகர்களுக்கு இது சாதாரணம் மாஸ் ஹீரோக்கள் படத்தில் ஹீரோயின்களை டம்மி பீஸாக தான் வைத்திருப்பார்கள். அந்தவகையில் தளபதியுடன் நடித்த கீர்த்தி சுரேஷ், மாளவிகா மோகனன் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

இப்படியிருக்க தளபதியின் 65வது பட பூஜையில் கலந்து கொள்ளாத பூஜா ஹெக்டே தற்போது தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூட தாமதமாக தெரிவித்துள்ளார். அதுவும் ரசிகர்கள் திட்டியதால் போனால் போகட்டும் என்பது போன்ற நேற்று இரவு 8 மணி அளவில் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

pooja-thalapathy-bday-twit
pooja-thalapathy-bday-twit

இதனால் கோபமடைந்த தளபதி ரசிகர்கள் நெல்சனிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். எப்போது போல் நடிகைகள் இந்த நடிகையும் டம்மி பீஸாக வைத்து விடுங்கள் என்று கூறி வருகின்றனர். நெல்சன் வெளியிட்ட போஸ்டரை ஷேர் செய்த பூஜாக்கு உலகமே வாழ்த்து கூறி வரும் தளபதிக்கு வாழ்த்து கூற நேரம் இல்லை போல.

தயாரிப்பாளர் முதல் இயக்குனர் வரை போஸ்டர் வெளியிட்டதே தளபதி பிறந்தநாளுக்கு தான் என்பதை மறந்து விட்டார் போல. தளபதியுடன் வாய்ப்பு கிடைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல, ஆனாலும் இந்த சம்பவத்திற்கு பின் பூஜா ஹெக்டே மாறிவிடுவார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending News