வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

விஜய்யை பற்றி மனம் திறந்து பேசிய பூஜா ஹெக்டே.. தனக்கு இந்த மாதிரி ரோலில் நடிக்க ஆசையாம்!

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா, பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த 2012ல் வெளியான சூப்பர் ஹீரோ படம் ‘முகமூடி’. இந்தப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் பூஜா ஹெக்டே. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடாததால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் அமையவில்லை.

இதையடுத்து ஹிந்தி, மற்றும் தெலுங்குப்படங்களில் கவனம் செலுத்தினார். ஹிந்தியில் இவர் நடித்த முதல் படமான மொஹஞ்சதாரோ சரியாக ஓடவில்லை. தெலுங்கில் ஹிட் அடித்த ‘புட்ட பொம்மா’ என்ற பாடலின் மூலம் ஒரே இரவில் புகழின் உச்சிக்கே சென்றார்.

தற்போது இவர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் “பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். இதன்மூலம் 12 வருடத்திற்குப் பின் மீண்டும் தமிழில் களமிறங்கியுள்ளார். சமீபத்தில் விஜய் குறித்து பேசிய அவர், விஜய் மிகவும் கூலான மனிதர் என்றார்.

மேலும், தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் மழை காரணமாக படப்பிடிப்பை முன்கூட்டியே முடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. மும்பைக்கு விரைவாக சென்றதில் எனக்கு விருப்பமில்லை. என்னை முன்கூட்டியே வீட்டிற்கு அனுப்பியது போல் உணர்ந்தேன் என்றார்.

pooja-hegde-cinemapettai
pooja-hegde-cinemapettai

மேலும், தனக்கு ஆக்சன் ரோல்களில் அதிகமாக நடிக்க ஆசை என கூறினார். தற்சமயம் இவர் பாகுபலி புகழ் பிரபாசுடன் மிகுந்த பொருட்செலவில் உருவாகிவரும் “ராதே ஷ்யாம்” படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News