சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

நடனம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட பூஜா.. இணையத்தில் கொண்டாடும் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகின் வசூல் சக்ரவர்த்தியாக வலம் வருபவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு ஊரடங்கு காலத்திலும் மாஸ்டர் படத்தை மாஸாக தியேட்டரில் வெளியிட்டு கொண்டாடும் ரசிகர்கள் நெஞ்சில் பால் வார்த்தார் தளபதி.

இவரின் படம் பற்றிய அப்டேட்டுகள் குறித்து ரசிகர்கள் பலரும் தெரிவித்தாலும் பல்வேறு காரணங்களுக்காக படக்குழு ரகசியமாய் காத்து வரும். கடந்த ஜூன் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் படத்தின் பிரத்யேக போஸ்டர்கள் வெளியானதிலிருந்து ரசிகர்கள் கொண்டாட்டமும் எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணமே உள்ளது.

அல்லு அர்ஜுன் பிரபாஸ் படங்களை தொடர்ந்து தளபதி படத்தில் நாயகியாக இணையும் பூஜா ஹெக்டே தொடர்ச்சியாக ரசிகர்களுக்கு பல்வேறு அப்டேட்களை அள்ளி விதைக்கிறார்.

pooja hegde
pooja hegde

மே மாதம் வரை ஜார்ஜியா நாட்டில் படப்பிடிப்பில் இருந்த படக்குழு இப்போது சென்னையில் முகாமிட்டுள்ளது. ஒரு பாடலும் சண்டைக்காட்சியும் மற்றும் சில காட்சிகளும் சென்னையை சுற்றி படமாக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக பூஜா தன் சமூக வலைதள பக்கங்களில் நடனப்பயிற்ச்சி எடுப்பது போலவும் இயக்குனர் நெல்சன் அருகில் இருப்பது போலவும் புகைப்படங்களை பதிவேற்றி அப்டேட் மழையில் ரசிகர்களை நீராட வைக்கிறார்.

இப்போது வரை தளபதியுடனோ அல்லது ஸ்பாட்டிலோ இருந்து படங்கள் லெளியாகவில்லை என்றாலும். வெளிவரும் என்கிற எதிர்பார்ப்பில் சமூக வலைகளில் பூஜாவை தளபதி ரசிகர்கள் பலரும் தொடர்ந்து வருகின்றனர்.

அப்டேட் அம்மணி

Trending News