சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

இத நான்தான் முதல்ல செய்றேன்.. கொண்டாட்டத்தில் தளபதி 65 பட நடிகை பூஜா ஹெக்டே

தமிழில் முகமூடி என்ற படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டேவுக்கு தமிழ் சினிமா பெரிய அளவு வரவேற்பை கொடுக்காததால் தெலுங்கு மற்றும் இந்திப் பக்கம் சென்றார். தற்போது அங்கு இவருக்கு ஏகப்பட்ட மார்க்கெட் உருவாகிவிட்டது.

அதை வைத்துக்கொண்டு தற்போது தமிழில் மீண்டும் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். விஜய் பட வாய்ப்பு கிடைத்த பிறகு மேலும் சில முன்னணி நடிகர்களுக்கு சென்றுள்ளது.

இது ஒருபுறமிருக்க பெரும்பாலான நடிகைகள் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும்போது அவர்களது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்காது என்ற கருத்துக்கள் பரவலாக இருந்து வருகிறது.

அதுவும் விஜய்யுடன் நடிக்கும் நடிகைகளுக்கு இது பெரும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. விஜய்யுடன் காதல், ரொமான்ஸ், டான்ஸ் ஆகியவற்றுடன் ஹீரோயின்கள் வேலை முடிந்துவிடுகிறது.

ஆனால் பூஜா ஹெக்டேவுக்கு அப்படி இல்லையாம். தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களின் கதாபாத்திரங்களையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து வருவதாக கூறியுள்ள பூஜாவிற்கு தளபதி 65 படத்திலும் அவருக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அதற்கு முன்பாக வெளியாக இருக்கும் ராதே ஷ்யாம் படத்தில் அவருக்கு stand-up பெண் காமெடியன் வேடமாம். இதற்காக பக்கம் பக்கமாக வசனங்கள் மனப்பாடம் செய்து பேச வேண்டியதாக இருந்தது எனவும், இந்த படத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த கதாபாத்திரத்தில் நான் தான் முதல் முதலாக நடிக்கிறேன் என தெரிவித்துள்ளார். பிரபாஸ் நடிப்பில் 400 கோடி பட்ஜெட்டில் ராதே ஷ்யாம் படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

pooja-hegde-cinemapettai
pooja-hegde-cinemapettai

Trending News