வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

விஜய் கூட இருந்து இருந்து நானும் விஜய்யாகவே மாறிவிட்டேன்.. பீஸ்ட் பற்றி மனம் திறந்த பூஜா ஹெக்டே

விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இந்த படத்தை இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். மேலும் அனிருத் இசையமைத்து வருகிறார்.

முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டிலும், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடந்து முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்போது 3-வது கட்ட படப்பிடிப்புகள் மீண்டும் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே கலந்துகொண்டார். தற்போது விஜய்யுடன் நடித்த அனுபவம் பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளது விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் ரொம்பவும் கூல் , தற்போது நானும் ரொம்ப கூலாக இருப்பது போல் உணர்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் விஜய்யுடன் இருந்து இருந்து நானும் அப்படியே மாறிவிட்டதுபோல் உணர்வதாக தெரிவித்துள்ளார் பூஜா ஹெக்டே.

அது மட்டுமில்லாமல் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் இந்த பேட்டியை பார்த்த பிறகு கண்டிப்பாக நெல்சன் தனக்கும் சில ஆக்ஷன் காட்சிகள் வைப்பார் என நம்புகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒரு சில படப்பிடிப்பு தளங்களில் மட்டுமே படப்பிடிப்பு முடிந்த பிறகும் அவர்களுடன் இருக்க தோன்றும், அப்படியான ஒன்றுதான் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பிலும் தனக்கு தோன்றியதாக பூஜா ஹெக்டே அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

vijay-pooja-hegde-cinemapettai
vijay-pooja-hegde-cinemapettai

Trending News