விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 65 படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே(pooja hegde) நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கும் தளபதி 65 படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.
தளபதி 65 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் சமீபத்தில் ஜார்ஜியா நாட்டில் முடிவடைந்த நிலையில் விரைவில் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோஸில் ஒரு பாட்டு சூட் செய்யப்பட உள்ளதாம்.
முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்திருந்தாலும் அதன்பிறகு பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்காமல் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தன்னுடைய கவனத்தை செலுத்த முடிவு எடுத்தார் பூஜா.
அது அவருக்குப் பெருமளவில் கைகொடுக்க தற்போது தெலுங்கு சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தெலுங்கில் மார்க்கெட் இருப்பதால் தற்போது தமிழிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
தளபதி 65 படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா மற்றும் சிறுத்தை சிவா இணையும் ஒரு புதிய படமொன்றிலும் பூஜா ஹெக்டே நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.
இந்நிலையில் பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு அவ்வப்போது நடிகைகள் செய்து வருகின்றனர். அந்தவகையில் பூஜா ஹெக்டே மேலாடையின்றி வெறும் கோர்ட் போட்டு மறைத்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
