புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பூஜா ஹெக்டேக்கு நடந்த மோசமான சம்பவம்.. வேதனையுடன் போட்ட பதிவு

தமிழில் முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் பூஜா ஹெக்டே. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிரபலமாக இருக்கும் இவரின் கைவசம் தற்போது பல திரைப்படங்கள் இருக்கிறது.

அதில் அவர் தற்போது இரண்டு பாலிவுட் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதற்காக அவர் அடிக்கடி மும்பைக்கு விமானத்தில் பறந்து சென்று கொண்டிருக்கிறார். அப்படி அவர் சமீபத்தில் மும்பைக்கு சென்று திரும்பும் போது சந்தித்த மோசமான சம்பவத்தை தன்னுடைய சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

அவர் அந்த பதிவில் கூறியிருப்பதாவது, மும்பையில் இருந்து புறப்படும் இன்டிகோ விமானத்தில் நான் பயணித்தேன். அப்போது அதன் ஊழியர் விபுல் நக்ஷே எங்களிடம் நடந்து கொண்ட முறை எங்களுக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது.

அவர் எங்களிடம் காரணமே இல்லாமல் மிகவும் திமிராகவும், எங்களை அச்சுறுத்தும் வகையிலும் நடந்து கொண்டார். இது போன்ற செயலை நாங்கள் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அன்று நடந்த சம்பவம் எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

பொதுவாக இதுபோன்ற பிரச்சினைகள் குறித்து நான் எப்போதும் சோஷியல் மீடியாவில் கூறுவது கிடையாது. ஆனால் அந்த பயணத்தின் போது எங்களுக்கு நடந்த சம்பவம் உண்மையிலேயே பயங்கரமாக இருந்தது என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அவருடைய இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் சில ரசிகர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இதுகுறித்து புகார் அளியுங்கள் என்றும் பூஜாவுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். சமீபகாலமாக விமான நிலையத்தில் சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News