அமெரிக்காவில் பிறந்த இந்திய வம்சாவழியைச் சார்ந்த நடிகை தான் பூஜா குமார். இவர் ‘காதல் ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதற்குப் பிறகு பூஜா குமார் தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பணியாற்றியிருக்கிறார். ஆனாலும் 2013ஆம் ஆண்டு கமல்ஹாசனுடன் இணைந்து ‘விஸ்வரூபம்’ படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட்டில் ரீஎன்ட்ரி கொடுத்தார் பூஜா.
இதனைத்தொடர்ந்து பூஜா, ‘உத்தமவில்லன்’, ‘மீன் குழம்பும் மண் பானையும்’, ‘விஸ்வரூபம் 2’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் திடீரென பூஜா குமாருக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும், அவருக்கு குழந்தை உள்ளது என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
கமலஹாசனுடன் நெருக்கமாக கிசுகிசுக்கப்பட்டார் பூஜா குமார் என்பது கோலிவுட் வட்டாரங்களில் அனைவரும் அறிந்ததே. இந்த ரகசிய புகைப்படத்தின் மூலம் பூஜா குமார் அனைத்தையும் தெளிவுபடுத்தி விட்டார்.
அதாவது பூஜா குமாருக்கு திருமணமான செய்தி ரகசியமாக வைக்கப்பட்டு இருந்ததாகவும், பூஜா சமூகவலைத்தளங்களில் இருந்தபோதிலும் இதுபற்றி அவர் எப்பொழுதும் பேசியதே இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
மேலும் அவரது கணவர் விஷால் ஜோஷி, தன்னுடைய பிறந்த நாளான நேற்று பூஜா குமாருடன் திருமணமானதை பற்றியும், அவர்களுக்கு பிறந்துள்ள குழந்தை பற்றியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார்.
அந்தப் பதிவில் விஷால், தங்களது நாவ்யா ஜோஷியை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைவதாகவும், பூஜா தன்னுடைய இந்த பிறந்தநாளை மிகச்சிறந்த மாற்றியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, ரசிகர்கள் பலரை வியக்க வைத்துள்ளது.