அண்மையில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த சூழலில் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரச்சாரத்தில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், விவசாயிகள் மற்றும் கிராமப்புற ஏழை கூலித் தொழிலாளர்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் தமிழக முதல்வர், “நானும் ஒரு விவசாயி என்பதால், விவசாயிகளின் வேதனை என்ன என்பதை நான் நன்கு அறிந்தவன்.
ஆகையால் விவசாய நலத்திட்டங்கள் பலவற்றையும் சிறப்புடன் செயல்படுத்தி வருகிறேன். மேலும் குடிமராமத்து திட்டத்தின் மூலம் நீர் பாசன வசதியை மேம்படுத்தியதால் தமிழக அரசு விவசாயிகளிடம் இருந்து சுமார் 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் நிவர் மற்றும் புரவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு நிவாரணத்தை உயர்த்தி வழங்குமாறு 600 கோடி ரூபாய் நிதி உதவியை தமிழக முதல்வர் ஒதுக்கீடு செய்தார்.
எனவே விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதிமுக அரசை ஆதரிக்குமாறு தற்போது தமிழக முதல்வர் தனது பிரச்சாரத்தின் மூலம் பறைசாற்றி வருகிறார்.