இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் திரையரங்கில் இன்று வெளியாகியுள்ள, மறைந்த முன்னாள் முதலமைச்சர் மற்றும் நடிகையுமான ஜெயலலிதா அவர்களின் பயோபிக் திரைப்படமான தலைவி படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களை பற்றி அறிந்துகொள்ள சினிமா ரசிகர்களும் அரசியல்வாதிகளும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் ஜெயலலிதா அவர்களின் நெருங்கிய நண்பரான சசிகலா தலைவி படத்தில் எப்படி காண்பிக்கப்பட்டுள்ளார் என்பதை தெரிந்துகொள்ள பலரும் தவித்துக் கொண்டிருந்தனர். தலைவி படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடித்த பூர்ணா படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
இந்தப் படம் துவங்கப்பட்ட காலகட்டத்தில் சசிகலாவாக நடிக்க வேண்டாம் என்றும் பல மிரட்டல்களை எதிர் கொண்டதாகவும் பூர்ணா தெரிவித்துள்ளார். அத்துடன் சசிகலாவை படத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் எப்படி வந்தார்கள் என்பதை மட்டுமே காண்பித்துள்ளனராம்.
ஆரம்ப காலத்தில் இருவரும் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றது. அப்பொழுது கார் விபத்தில் இரண்டு பேரும் சிக்கிக்கொண்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றது. இது போன்ற ஒரு சில காட்சிகளில் மட்டுமே தலைவி படத்தில் சசிகலா இடம்பெற்றுள்ளாராம்.
ஏனென்றால் ஜெயலலிதா அவர்கள் அரசியலுக்கு வரும் வரை மட்டுமே தலைவி படத்தில் காண்பிக்கப்பட்டிருக்கும். அதன் பிறகு ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை படமாக்கினால் சசிகலா முக்கிய அங்கமாக இருப்பார்.
ஆகையால் இயக்குனர் அதனை தவிர்த்து விட்டார் என்று பூர்ணா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் தலைவி படத்தை இரண்டாவது பாகம் எடுத்தால் அதிலும் நான் தான் சசிகலாவாக நடிப்பேன் என்று இயக்குனரிடம் பூர்ணா கூறியுள்ளாராம்.