வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஆரம்பிக்கும் முன்பே ஏற்பட்ட மோதல்.. கேரியருக்காக 30 வருட நட்பை உடைத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள்தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் சினிமாவில் தலை காட்டாமல் பல வருடம் இருந்தவர். உலக நாயகன் கமலஹாசனின் மகள்கள் இருவரும் சினிமாவில் நடிக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டு மகள்களுமே திரைக்குப் பின்னால் இருந்து வேலை செய்வதையே இன்று வரை விரும்பி வருகிறார்கள்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய முன்னாள் கணவர் நடிகர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசனை வைத்து மூன்று என்னும் திரைப்படத்தை இயக்கி முதன்முதலாக கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படம் பொருளாதார ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read: சூர்யா பட வெற்றி இயக்குனரை தட்டி தூக்கிய ரஜினி.. உறுதியான அடுத்த பட போலீஸ் காம்போ

அதன் பின்னர் சில வருடம் படம் பண்ணாமல் இருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா ஆனந்தை வைத்து வை ராஜா வை என்னும் திரைப்படத்தை இயக்குனர். இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பெயர் வாங்கி கொடுத்தது. இந்த படத்திலும் தனுஷ் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

வை ராஜா வை திரைப்படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல வருடங்களாக எந்த படங்களும் இயக்கவில்லை. தற்போது தன்னுடைய கணவரான தனுஷுடனான பிரிவிற்குப் பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் ஐஸ்வர்யா. தற்போது இவர் லால் சலாம் என்னும் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

Also Read: விரைவில் உருவாக இருக்கும் பாட்ஷா 2 .. ரஜினியின் அனுமதிக்காக காத்திருக்கும் அல்டிமேட் ஹீரோ

இந்தப் படத்தில் ரஜினிகாந்த் தன் மகனுக்காக ஒரு முக்கியமான ரோலில் நடிக்க இருக்கிறார். இது கிரிக்கெட் சம்பந்தப்பட்ட திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஹீரோவாக நடிக்க இருக்கின்றனர். மேலும் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் இருவருமே 30 வருடங்களாக நட்புடன் பழகி வந்தனர். இந்த நிலையில் லால் சலாம் படக்குழுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பூர்ணிமா பாக்யராஜ் இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். படத்திலிருந்து விலகுவதோடு இவர்களுடைய 30 வருட நட்பும் கேள்விக்குறியாகிவிட்டது.

Also Read: 850 தியேட்டரில் ஹவுஸ்புல்லான சூப்பர் ஸ்டாரின் படம்.. பாட்ஷா படம் போல் ரஜினிக்கு அமைந்த ஹிட் படம்

Trending News