வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

செஞ்ச தப்பை மறைக்க நீலி கண்ணீர் வடித்த பூர்ணிமா.. பிக் பாசை விட்டு வெளியே வந்ததும் யாரை சந்தித்தார் தெரியுமா?

BB7 Tamil: இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பார்வையாளர்களிடையே அதிக வெறுப்பை சம்பாதித்து இருப்பவர் பூர்ணிமா தான். மற்றவர்களை கஷ்டப்படுத்துவது, கட்டம் கட்டி அடிப்பது, அடுத்தவர்கள் கஷ்டத்தில் சிரிப்பது என பூர்ணிமா செய்யாத வன்மங்களே இல்லை என்று சொல்லலாம். அவர் 16 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியே போனது பார்வையாளர்களுக்கு பெரிய சந்தோஷமான விஷயம் எல்லாம் இல்லை. பூர்ணிமாவுக்கு இப்படி ஒரு எலிமினேஷன் யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஓட்டு எண்ணிக்கையில் அவர் தோற்கடிக்கப்பட்டு, மற்ற போட்டியாளர்கள் சேவ் ஆகும் பொழுது வெளியேற வேண்டும் என்று தான் எல்லோருமே ஆசைப்பட்டார்கள். ஆனால் பூர்ணிமா தான் ரொம்பவும் விவரம் என்பதை இந்த விஷயத்தில் காட்டிவிட்டார். செய்த தப்புக்கெல்லாம் சாஷ்டாங்கமாக போட்டியாளர்கள் அத்தனை பேர் முன்னிலையிலும் கீழே விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு அசால்ட் ஆக 16 லட்சத்துடன் வெளியேறி இருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு தனக்கு எவ்வளவு நெகட்டிவ் விமர்சனங்கள் இருக்கிறது என்பதை பக்காவாக புரிந்து கொண்டார் பூர்ணிமா. இந்த நெகட்டிவ் விமர்சனத்தை எல்லாம் மாற்றுவதற்காக அவர் ஓடோடி சென்று நீலி கண்ணீர் வடித்த இடம்தான் கேப்டனின் சமாதி. பாசிட்டிவாக மாறும் என நினைத்து பூர்ணிமா செய்த விஷயம் நேற்றிலிருந்து சமூக வலைத்தளத்தில் கேலி கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது.

Also Read:3 லட்சம் வாக்குகளை கைப்பற்றிய அர்ச்சனா.. மாயக்காரியை காப்பாற்ற பலியாடாக போகும் போட்டியாளர் இவர்தான்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அந்த நாளிலேயே அவர் கேப்டனின் சமாதிக்கு சென்றதே கொஞ்சம் சந்தேகமாக தான் இருக்கிறது. பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் கூட்டம் கூட்டமாக கேப்டனின் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் பூர்ணிமா அங்கே சென்று கதறி அழுதது, பார்ப்பதற்கே ரொம்ப மட்டமாக இருந்தது.

நீலி கண்ணீர் வடித்த பூர்ணிமா

பூர்ணிமா யூடியூப் பிரபலம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அவர் நிறைய வீடியோக்கள் போட்டு இருக்கிறார், பேட்டிகள் கொடுத்திருக்கிறார். அதில் எதிலுமே விஜயகாந்த் பற்றி அவர் பேசியதே கிடையாது. பிக் பாஸ் வீட்டில் சம்பாதித்த கெட்ட பெயரை, கேப்டன் சமாதிக்கு வந்து மாற்றி விடலாம் என்று அவர் போட்ட திட்டம் அருவருக்கத்தக்கதாக இருக்கிறது.

captain cemetry
captain cemetry

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், செத்தாலும் ஆயிரம் பொன் என்று ஒரு பழமொழி இருக்கிறது. அப்படித்தான் இப்போது கேப்டன் விஜயகாந்த் கூட ஆகிவிட்டார். தங்கள் பெயரில் இருக்கும் நெகட்டிவ் விமர்சனங்களை மாற்றிக்கொள்ள நிறைய பேர் இப்படி அவருடைய சமாதிக்கு வந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். நெல்லுக்கு பாயும் தண்ணீர், புல்லுக்கும் பாயும் என்பது போல் பிக் பாஸ் வீட்டின் சூனியமாய் இருந்த பூர்ணிமா தன்னுடைய பாவங்களை கேப்டன் சமாதியில் வந்து போக்கி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

Also Read:ஒரு போஸ்ட்க்கு 100 ரூபாய்.. இணைய கூலிப்படை செய்த வேலை, ஸ்க்ரீன் ஷாட்டுடன் மாட்டிய பிக்பாஸ் விஷப்பூச்சி

Trending News