புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கெட்டப்ப மாத்துனாலும் கேரக்டர் மாற மாட்டேங்குதே.. மொத்த வன்மத்தையும் கக்கும் பூர்ணிமா

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் கொஞ்சம் போராக சென்று கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் டாஸ்க் தான். ஆள் மாறாட்டம் செய்வது போல் அனைவரும் கெட்டப்பை மாற்றிக்கொண்டு அலப்பறை செய்து வருகின்றனர்.

அதிலும் முக்கியமாக கன்டென்ட் கொடுக்கிறேன் என்ற பெயரில் அவர்கள் பண்ணும் அக்கப்போர் இதற்கு ஒரு எண்டே இல்லையா என ரசிகர்களை கதற வைத்துள்ளது. இதில் பெண்களை கூட ஒரு விதத்தில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஆண்கள் அனைவரும் பெண் உடையை அணிந்து கொண்டு உலா வரும்போது கொஞ்சம் பகிர் என்று தான் இருக்கிறது.

அந்த வகையில் இன்றைய எபிசோடில் சரவண விக்ரம் போட்டிருக்கும் கெட்டப் இப்போது சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று பூர்ணிமா தினேஷின் கெட்டப்பில் இருந்து கொண்டு தன்னுடைய மொத்த வன்மத்தையும் கக்கி கொண்டிருக்கிறார்.

Also read: இந்த வாரம் பிக்பாஸை விட்டு வெளியேற போகும் செட் ப்ராப்பர்டி.. இணையத்தை கலக்கும் ஓட்டிங் லிஸ்ட்

அதாவது நேற்றைய எபிசோடில் தினேஷ் விஷ்ணுவை ப்ரோமோ பொறுக்கி என்று கூறியிருந்தார். இதனால் உச்சகட்ட கோவத்திற்கு ஆளான விஷ்ணு மூச்சை பிடித்துக் கொண்டு சண்டை போட்டதை நாம் பார்த்தோம். அதை அப்படியே உள்வாங்கிக் கொண்ட பூர்ணிமா தற்போது அதே வார்த்தையை உபயோகித்து கடுப்பேற்றி வருகிறார்.

தினேஷாவது அதை ஓரிரு முறை தான் சொன்னார். ஆனால் இந்த பூர்ணிமா குறைந்தபட்சம் 200 தடவையாவது அந்த வார்த்தையை சொல்லி இருப்பார். இதன் மூலம் மீண்டும் விஷ்ணுவை கோபப்படுத்தி தினேஷ் மீது பாய வைக்க வேண்டும். அதை வைத்து ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளாக்கி விட வேண்டும் என்பதுதான் அவருடைய திட்டம்.

ஆனால் இது அவருக்கு தான் ஆப்பாக முடியும். ஏனென்றால் தற்போது அவர் நடந்து கொள்வதை பார்க்கும் போது ரசிகர்கள் முன்பை விட அதிகமாக அவரை கழுவி ஊற்றி வருகின்றனர். அந்த வகையில் கெட்டப்பை மாற்றினாலும் கேரக்டரை மாத்தாமல் அலப்பறை பண்ணும் பூர்ணிமா விரைவில் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: கோல்ட் ஸ்டாரால் கொதித்துப் போன மாயா.. இது என்ன பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு வந்த சோதனை

Trending News