வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கேவலமான கெட்ட வார்த்தை பேசி வசமாக சிக்கிய பூர்ணிமா.. ரவுண்டு கட்டி அடித்த மணி, விஷ்ணு

BB7 Tamil: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிறகு அந்த நிகழ்ச்சிக்கான மவுசு அப்படியே குறைந்துவிட்டது. என்ன காரணம் எல்லாம் சொல்லி பிரதீப் ஆண்டனியை வெளியில் அனுப்பினார்களோ அதை எல்லாமே வீட்டிற்குள் இருப்பவர்கள் தொடர்ந்து செய்து வருவது தான் பார்வையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

இருந்தாலும் கடந்த இரண்டு வாரங்களாக மாயா மற்றும் பூர்ணிமா சுற்றி நடக்கும் சிக்கல்களை தாங்கிக் கொள்ள முடியாமல் கதறி அழுவது பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. மாயா ஒரு பக்கம் நான் வீட்டிற்கு போகிறேன் என்று சொல்ல, பூர்ணிமா ஒரு பக்கம் எனக்கு பயமாக இருக்கிறது என்று கதறி அழுவதை பார்ப்பதற்கே சந்தோஷமாக இருக்கிறது.

Also Read:ஆண்டவரை கோர்த்து விடும் ப்ளூ சட்டை.. அந்தர் பல்ட்டி அடிக்கும் கமல்

இதற்கிடையில் இன்று பிக் பாஸ் ஐந்து ஸ்டார்களை கொடுத்து வீட்டிற்குள் கொளுத்தி போட்டு விட்டார். அதாவது அந்த ஸ்டார் எனக்கு வேண்டும் அல்லது இவர்களுக்கு கொடுக்கக் கூடாது என நின்று பேசி முடிவு செய்ய வேண்டும் என்பதுதான் டாஸ்க். இதில் பூர்ணிமாவுக்கு ஸ்டார் கொடுக்கக் கூடாது என்பதற்கு மணி வைத்த காரணம்தான் மொத்த பிக்பாஸ் வீட்டையும் அலற வைத்திருக்கிறது.

வசமாக சிக்கிய பூர்ணிமா

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பல்கலைக்கழகம் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்கின் போது பூர்ணிமா, அவரைப் பற்றி பேசிய தினேஷை பார்த்து T****a என்ற வார்த்தையை சொல்லி இருக்கிறார். இதை மணி கவனித்துவிட்டார். இருந்தாலும் அதை வெளியில் சொல்லவில்லை. இன்று கொடுக்கப்பட்ட ஸ்டார் டாஸ்கின் போது சரியான நேரத்தில் பூர்ணிமா சொன்ன வார்த்தையை வெளியில் சொல்லிவிட்டார்.

பூர்ணிமா நான் அந்த வார்த்தையை சொல்லவே இல்லை என்று நியாயம் பேசவில்லை. ஆமா நான் அந்த வார்த்தையை சொல்லி இருக்கலாம். தினேஷ் பேசியது எனக்கு அதிக கோபத்தை ஏற்படுத்தியது, எனவே நான் அப்படி பேசி இருப்பேன் எனக்கு ஞாபகம் இல்லை. இது போன்ற வார்த்தைகளை வெளியில் சரளமாக பேசக்கூடிய ஆள் தான் நான் என்று தைரியமாக சொல்லுகிறார்.

T****a என்ற வார்த்தையை நான் சொல்லியிருந்தாலும் அதை தவறான உள்நோக்கத்தோடு சொல்லவில்லை என்று பூர்ணிமா சொன்னது எல்லாம் அருவெறுப்பின் உச்சம். பிக் பாஸ் வீட்டில் இது போன்ற வார்த்தைகளை பேசுவது எல்லாம் விதிமுறை மீறல். இந்த சர்ச்சைக்கு பிக் பாஸ் மற்றும் கமல் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read:2023 ஆம் ஆண்டு ஜொலித்த 3 பிக் பாஸ் ஹீரோக்கள்.. டாடாவால் கவினுக்கு அடித்த ஜாக்பாட்

Trending News