வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் இவர்தான்.. ஆண்டவருக்கு முன்பே தில்லாக சொன்ன பூர்ணிமா

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் முழுவதும் பணப்பெட்டியை யார் எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பிலேயே முடிந்தது. பலரும் எதிர்பார்க்காத வண்ணம் பூர்ணிமா 16 லட்சத்தோடு வெளியேறியது நிச்சயம் புத்திசாலித்தனமான முடிவு தான்.

அதைத்தொடர்ந்து இன்று விசித்ரா வெளியேற்றப்பட்டது மிகப்பெரிய ட்விஸ்ட். அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது வெளியாகி உள்ள புரோமோவும் நிகழ்ச்சிக்கான ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: இந்த வாரம் பிக்பாஸை விட்டு வெளியேறியது இவர்தான்.. கடைசி நேரத்தில் நடந்த அதிரடி ட்விஸ்ட்

அதாவது வீட்டை விட்டு சென்ற பூர்ணிமா இன்று பிக் பாஸ் மேடைக்கு வந்துள்ளார். அவரை வரவேற்ற கமல் உங்கள் நண்பர்களை பற்றி சொல்லுங்கள் என கூறுகிறார். உடனே அவர் மாயாவிடம் சும்மா வீட்டுக்கு வந்தா துரத்தி துரத்தி அடிப்பேன் என கூறுகிறார்.

இதன் மூலம் டைட்டிலை வெல்ல வேண்டும் என அவருக்கு மறைமுகமான செய்தியை கொடுத்துள்ளார். அதேபோல் ஒவ்வொருவரை பற்றியும் பேசிய அவர் இறுதியில் அர்ச்சனா டைட்டில் வின்னர் என ஒரே போடாக போட்டார்.

Also read: அப்ப 150 கோடி வடையெல்லாம் கப்ஸாவா.. பிக்பாஸுக்காக கமல் வாங்கும் ஒரு நாள் சம்பளம் இதுதான்

இது வீட்டுக்குள் இருந்தவர்களை கடும் அதிர்ச்சியாக்கியது என்பது அவர்களின் முகத்திலேயே தெரிந்தது. அதிலும் அர்ச்சனா இது தெரிந்தும் தெரியாதது போல் நின்று கொண்டிருந்தார். ஆக மொத்தம் பூர்ணிமா கொளுத்தி போட்ட இந்த நெருப்பு எப்படி எரியப் போகிறது என்பது வரும் வாரத்தில் தெரியும்.

Trending News