ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மானங்கெட்ட வேலையை பார்த்த பூர்ணிமா.. பிக் பாஸ் வீட்டில் மானம் போனதாக கதறும் அமுல் பேபி

Bigg Boss Season 7: 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஐந்து வைல்டு கார்டு போட்டியாளர்கள் புதிதாக என்ட்ரி கொடுக்கப் போகின்றனர். இந்த சூழ்நிலையில் பிக்பாஸ் வீட்டின் நான்காவது கேப்டனாக இருக்கும் முதல் பெண் போட்டியாளர்தான் பூர்ணிமா.

கேப்டன் பூர்ணிமா பிக் பாஸ் வீட்டின் தலைவியாக இருந்து கொண்டு மானங்கெட்ட வேலையை பார்த்துட்டிங்களே என்று நெட்டிசன்கள் இவரை கிழித்து தொங்க விடுகின்றனர். பிரபல யூட்யூபரான பூர்ணிமா பிக் பாஸ் போட்டியாளராக களம் இறங்கும் போது செம ஸ்ட்ராங்கான கண்டஸ்டண்ட் என அனைவரும் நினைத்தனர்.

ஆனால் இவர் மாயாவின் கை பாகையாகவே மாறிவிட்டார். இவர்களது பிரண்ட்ஷிப் ரசிகர்களுக்கு மட்டுமல்ல போட்டியாளர்களுக்கும் சுத்தமாகவே பிடிக்கவில்லை. அப்படி இருந்தும் படுமோசமாக இருவரும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் இந்த வார கேப்டன் பொறுப்பில் இருக்கும் பூர்ணிமா, அமுல் பேபி விஷ்ணு குளித்துக் கொண்டிருக்கும் போது கதவை திறந்து பார்த்துவிட்டார்.

இதனால் விஷ்ணு, ‘இந்த வீட்ல எனக்கு மானம் போய்விட்டது. யாராவது இத தட்டிக் கேட்க மாட்டீங்களா! எந்த விஷயத்திற்கும் முதல் ஆளாக குரல் கொடுக்கும் மாயா, நீங்களாவது இதை எதிர்த்து கேட்க மாட்டீங்களா’ என்று கதறுகிறார்.

‘கதவு சரியாக மூடலை. கொஞ்சம் திறந்திருந்ததால் தான் நான் திறந்து பார்த்தேன்’ என்று பூர்ணிமா விஷ்ணுவுக்கு விளக்கம் கொடுக்கிறார். இருப்பினும் ஆண்களுக்கும் கற்பு இருக்கிறது. இதுவே ஒரு பொண்ணுக்கு நடந்திருந்தால் இந்நேரம் மாயா தாம் தூம்னு வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சிருப்பார்.

இந்த விஷயத்தில் மாயா பூர்ணிமாவுக்கு ஆதரவாக பேசி, அவர்களுடைய கேவலமான குணத்தை வெளிக்காட்டி விட்டனர். ஏற்கனவே பூர்ணிமா- விஷ்ணு இருவருக்கும் 2ம் வாரத்திலேயே காதல் பத்திக்கிச்சு. தங்களுடைய காதலை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்வதற்காக தான் இருவரும் சேர்ந்து இப்படி பண்றாங்க.

Trending News