வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

என் மூஞ்ச கூட பாக்க தோணலையா.? இந்துஜாவால் அழுது புலம்பும் பூர்ணிமா, காரணம் இதுதான்

Poornima Ravi BB7: பிக் பாஸ் டைட்டில் வின்னரே நான்தான் என்று தவுலத்தாக சுற்றிக் கொண்டிருந்தார் பூர்ணிமா ரவி. வைல்டு கார்டு என்ட்ரிகல்க்கள் வீட்டுக்குள் நுழைந்ததிலிருந்து பூர்ணிமாவுக்கு கொஞ்சம் நம்பிக்கை ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது. அதிலும் அர்ச்சனா மற்றும் தினேஷுக்கு ஆடியன்ஸ்களிடமிருந்து வரும் கைதட்டுகள் பூர்ணிமாவை பதற செய்திருக்கிறது.

ஏற்கனவே கதி கலங்கி நிற்கும் பூரணிமாவை போனவாரம் கமலஹாசன் சரமாரியாக கேள்வி கேட்டு பதற வைத்திருக்கிறார். நம்ம சரியா தான் விளையாடுறோமா, வெளியில் நம்மை பார்ப்பவர்கள் எப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற பயம் பூரணிமாவை தொற்ற ஆரம்பித்துவிட்டது. ஓரளவுக்கு கணித்து கெட்ட பெயரோடு நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்று கண்ணீர் எல்லாம் விட்டார்.

Also Read:கீரியும், பாம்புமாய் சண்டை போடும் ஹரிஷ் கல்யாண், MS பாஸ்கர்.. பார்க்கிங் எப்படி இருக்கு? ரிவ்யூ ஷோ விமர்சனம்

பதட்டத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பூரணிமாவை இன்னும் கலங்கடிக்கும் வகையில் இன்று சிறப்பு விருந்தினராக வீட்டிற்குள் நுழைந்த இந்துஜா ஒரு வேலையை செய்திருக்கிறார். பூர்ணிமா மற்றும் இந்துஜா கல்லூரி காலத்து தோழிகள் .பூர்ணிமா யூடியூபில் பிரபலமாக இருக்க இந்துஜா சினிமாவில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார்.

அழுது புலம்பும் பூர்ணிமா

இந்துஜா சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பார்க்கிங் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் பிரமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டில் இந்துஜா மற்றும் ஹரிஷ் கல்யாண் சென்று இருக்கிறார்கள். வீட்டிற்குள் பூர்ணிமாவை பார்த்த இந்துஜா கண்டுகொள்ளவே இல்லை.

இதைப் பற்றி மாயாவிடம் சொல்லும் பூர்ணிமா ரொம்பவே நொந்து போய் பேசுகிறார். நான் ஏற்கனவே ரொம்ப நொந்து போய் இருக்கிறேன். வெளியில் இருந்து இப்படி வருபவர்கள் எனக்கு ஆறுதலாக ஏதாவது பேசினால் நன்றாக இருக்கும். ஆனால் இந்துஜா என் முகத்தைக் கூட பார்க்கவில்லை. என்னை தேட கூட இல்லை என்று சொல்கிறார்.

இந்துஜா பூர்ணிமாவிடம் பேசாமல் இருந்ததற்கு பிக் பாஸ் விதி கூட ஒரு காரணமாக இருக்கலாம். இருந்தாலும் ஏற்கனவே ஆட்டம் கண்டு போய் நிற்கும் பூர்ணிமாவுக்கு தன்னுடைய நெருங்கிய தோழி பேசாமல் போனது மிகப்பெரிய அச்சத்தை கொடுத்திருக்கிறது. இதை மனதில் வைத்துக் கொண்டு இந்த வாரம் உனக்கு பூர்ணிமா என்ன செய்யப் போகிறார் என்பது இனி தான் தெரியும்.

Also Read:வேலை செஞ்சா தான் சோறு.. பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸை பெண்டு நிமித்த வரும் டாஸ்க்

Trending News