சனிக்கிழமை, பிப்ரவரி 8, 2025

புத்தம் புது சீரியலாக சன் டிவியில் வரப்போகும் பூவே செம்பூவே.. ஜீ தமிழில் இருந்து தாவிய கார்த்திக் ஜோடி

Serial: சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்களில் சன் டிவியில் மட்டுமே மொத்தம் 18 சீரியல்கள் ஒளிபரப்பாக வருகிறது. இந்த 18 சீரியல்களுமே மக்கள் இடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இன்னும் அடுத்த புது சீரியல்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறது. அதற்கான ஷூட்டிங் எல்லாம் ஆரம்பித்த நிலையில் தற்போது சில சீரியல்களை முடிப்பதற்கு ஏற்பாடுகள் போய்க்கொண்டிருக்கிறது.

அதற்கு பதிலாக முதலாவதாக வரப்போவது ஆடுகளம் என்ற சீரியல். இதில் அன்பே வா என்ற சீரியலில் நடித்த ஹீரோயின் டெலினா டேவிட் மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மௌன ராகம் சீசன் 2 சீரியலின் ஹீரோவும் கமிட்டாகி இருக்கிறார். இதனை தொடர்ந்து ராகவி என்ற சீரியலும் வரப்போகிறது.

அடுத்தபடியாக மூன்றாவது சீரியலாக திருமுருகன் இயக்கப் போகும் ஒரு சீரியலும் வரிசையில் நிற்கிறது. இதனை அடுத்து நான்காவது சீரியலாக பூவே செம்பூவே என்ற சீரியலுக்கான சூட்டிங்கை ஆரம்பித்து விட்டார்கள். இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் பெண்கள் சம்பந்தமான கதைகளை தூக்கி நிறுத்தும் விதமான கேரக்டரில் ஆர்த்தி என்பவர் நடித்து வருகிறார்.

இவர் ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த கார்த்திகை தீபம் என்ற சீரியலில் தீபா கேரக்டரில் நடித்து பிரபலமாகிவிட்டார். பின்பு ஒரு சில காரணங்களால் அந்த சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியாத காரணத்தினால் சன் டிவிக்கு தாவி விட்டார். இவருடைய நடிப்பையும் இவருக்காகவும் நாடகத்தை பார்ப்பதற்கு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் கிராமத்து பெண்ணாக தீபா வலம் வரப்போகிறார். மேலும் இந்த சீரியல் மதியம் நேரத்தில் ஒளிபரப்பாக போகிறது என்ற தகவல் வெளிவந்திருக்கிறது. ஆனால் எந்த சீரியல் முடிவுக்கு வரப் போகிறது அதற்கு பதிலாக என்னென்ன சீரியல்கள் போடப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

சன் டிவியை பொறுத்தவரை பழைய சீரியல்கள் முடிவுக்கு வருவதற்கு முன்னே ஏகப்பட்ட புது சீரியல்களை கைவசம் வைத்துக்கொண்டு தான் காரியத்திலேயே இறங்குவார்கள். அதனால் தற்போது சன் டிவியில் 4 புத்தம் புது சீரியல்கள் அடுத்தடுத்து வருவதற்கு தயாராகி இருக்கிறது.

Trending News