திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

பூவே உனக்காக சங்கீதாவின் கணவர் யார் தெரியுமா? அட, நம்ம சிம்பு பட இயக்குனர்!

விஜய் மற்றும் விக்ரமன் கூட்டணியில் முதன்முதலாக உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் பூவே உனக்காக. இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் தான் நடிகை சங்கீதா.

விஜய்யின் கதாபாத்திரம் எந்த அளவு வரவேற்பை பெற்றதோ அதே அளவுக்கு சங்கீதாவின் துறுதுறுப்பான நடிப்பும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. விஜய்க்கு பூவே உனக்காக படம் தான் முதல் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

ஆனால் அதற்கு முன்பே சங்கீதா பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் அந்த காலகட்டங்களில் வெகுவேகமாக வளர்ந்து வந்த நடிகைகளில் அவரும் ஒருவராக திகழ்ந்தார்.

தமிழ் சினிமாவை நீண்ட காலம் தன் கைக்குள் வைத்திருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சங்கீதா திடீரென ஒளிப்பதிவாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அவர் வேறு யாரும் இல்லை ஒளிப்பதிவாளர் சரவணன்தான்.

பின்னாளில் இவர் சிம்பு நடித்த சிலம்பாட்டம் எனும் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் சிம்பு ரசிகர்களின் பேவரைட் படமாக அமைந்தது. இருந்தாலும் வசூல் ரீதியாக பெரிய வெற்றி இல்லை என்றே கூறுகின்றனர்.

சங்கீதா மற்றும் சரவணன் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தனர். அப்போது பூவே உனக்காக படத்தில் பார்த்த சங்கீதாவா இது? என யோசிக்கும் அளவுக்கு அவரது தோற்றம் இருந்தது.

sangeetha-saravanan-cinemapettai
sangeetha-saravanan-cinemapettai
- Advertisement -spot_img

Trending News