செவ்வாய்க்கிழமை, மார்ச் 11, 2025

ரீ என்ட்ரி கொடுக்கும் பூவே உனக்காக சங்கீதா.. எந்த ஹீரோ படத்தில் தெரியுமா.?

Sangeetha: விஜய்க்கு இன்றுவரை மிகப் பெரும் அடையாளமாக இருக்கும் படம் தான் பூவே உனக்காக. அவருடைய இமேஜை மொத்தமாக மாற்றிய படம் என்றும் சொல்லலாம்.

அப்படத்தில் ஹீரோயினாக நடித்த சங்கீதா குழந்தை பருவத்தில் இருந்தே நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த 2000ம் ஆண்டு கண் திறந்து பாரம்மா என்ற தமிழ் படத்தில் அவர் நடித்திருந்தார்.

அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டிலான அவர் நடிப்புக்கு பிரேக் விட்டார். ஆனால் கடந்த சில வருடங்களாக மலையாள படங்களில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

ரீ என்ட்ரி கொடுக்கும் பூவே உனக்காக சங்கீதா

அதனால் நிச்சயம் அவர் தமிழுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படி ரசிகர்கள் எதிர்பார்த்த விஷயம் தற்போது நடந்துள்ளது.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கழித்து சங்கீதா மீண்டும் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுக்க இருக்கிறார். பரத் ஹீரோவாக நடிக்கும் காளிதாஸ் 2 படத்தின் மூலம் அவர் கோலிவுட் பக்கம் வருகிறார்.

தற்போது 47 வயதாகும் சங்கீதா அதே இளமையுடன் தான் இருக்கிறார். ஆக மொத்தம் நதியாவுக்கு சரியான போட்டியாக இருக்கும்.

Trending News