சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

10 வருடத்திற்கு பிறகு ராகவா லாரன்ஸுடன் இணைந்த முரட்டு நடிகர்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ருத்ரன்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸுடன் பத்து வருடத்திற்கு பிறகு பிரபல நடிகர் இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் இந்த படத்தில் அந்த நடிகருக்கு என்ன வேடமாக இருக்கும்? எனவும் யோசிக்க வைத்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி பின்னர் இயக்குனராக உருவெடுத்து தற்போது நடிகராகவும் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படங்களின் மூலம் வசூல் நாயகனாக மாறினார்.

ஆனால் கடைசியாக வெளிவந்த காஞ்சனா 3 திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லை. பார்த்து பார்த்து சலித்து போன திரைக்கதையில் உருவானதால் அந்த படம் பெரிய அளவில் சொதப்பியது. இருந்தாலும் வசூல் 100 கோடி என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

இது ஒரு புறமிருக்க தற்போது ராகவா லாரன்ஸ் தற்போது ஆடுகளம், பொல்லாதவன் போன்ற படங்களை தயாரித்த 5 ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து ருத்ரன் எனும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக முதல் முறையாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தின் மூலம் முதல் முறையாக இயக்குனராக உருவெடுக்கிறார் 5 ஸ்டார் கதிரேசன். இந்த படத்தில் ராகவா லாரன்ஸுடன் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். ஏற்கனவே சரத்குமார் மற்றும் ராகவா லாரன்ஸ் கூட்டணியில் வெளியான காஞ்சனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

sarathkumar-rudran-cinemapettai
sarathkumar-rudran-cinemapettai

திருநங்கை கதாபாத்திரத்தில் கலக்கியிருந்த சரத்குமாருக்கு தற்போது ருத்ரன் படத்தில் எந்த மாதிரி கதாபாத்திரமாக இருக்கும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளனர் படக்குழுவினர்.

Trending News