திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

நந்தா படத்திற்கு பிறகு சூர்யா 40 படத்தில் இணைந்த முரட்டு ஆள்.. இனி படம் டாப் டக்கரு தான்!

சூரரைப் போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க இருக்கும் சூர்யா 40 படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளார். இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வாயிலாக படத்தின் இயக்குனர் பாண்டிராஜிடம் புத்தாண்டை முன்னிட்டு சூர்யா 40 படத்தின் அப்டேட் விடுமாறு தொடர்ந்து அவரை நச்சரித்து வந்தனர்.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பாண்டிராஜ், இன்னும் சூர்யா 40 படத்திற்கான கதாபாத்திர தேர்வில் முக்கியமான இரண்டு கதாபாத்திரம் தேர்வு செய்யப்பட்டவுடன் நிச்சயம் படத்தின் அப்டேட் வெளிவரும் என குறிப்பிட்டிருந்தார்.

அதில் ஒரு கதாபாத்திரத்தில் கிராமத்துக் கதைகளுக்கு ஏற்ற நடிகராக ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை நடித்து வரும் ராஜ்கிரண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சூர்யாவுடன் மிக நெருக்கமான கதாபாத்திரமாம்.

suriya40-cinemapettai
suriya40-cinemapettai

இந்த படத்திற்கு பிறகு மீண்டும் ராஜ்கிரண் மார்க்கெட் சூடு பிடிக்கும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். சூர்யா மற்றும் ராஜ்கிரண் ஆகிய இருவரும் கடைசியாக பாலா இயக்கத்தில் வெளியான நந்தா படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

rajkiran-cinemapettai
rajkiran-cinemapettai

இந்நிலையில் 20 வருடம் கழித்து மீண்டும் இருவரும் ஒரே படத்தில் நடிப்பதால் சூர்யா 40 படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகமாகிவிட்டது. மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் சூர்யா 40 படத்தை சூர்யாவின் பிறந்தநாள் அன்று வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

- Advertisement -

Trending News