வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

சூர்யாவுடன் முதன் முறையாக இணைந்த முரட்டு நடிகர்.. எக்கச்சக்க எதிர்பார்ப்பை கிளம்பும் சூர்யா40

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள சூர்யா 40 படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றி தினமும் வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் சூர்யா படத்திற்கு முதன் முறையாக டி இமான் இசையமைக்க உள்ளார். இவர் ஏற்கனவே பாண்டியராஜ் படங்களில் தொடர்ந்து பணியாற்றி வருவதால் சூர்யா படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இன்னும் ஒரு படம் கூட வெளியாகாத நாயகி பிரியங்கா அருள்மோகன் என்பவரையும் ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. பிரியங்கா நடித்த டாக்டர் படம் இன்னும் ரிலீசாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் சூர்யா சினிமாவுக்கு வந்த இந்த 23 ஆண்டுகளில் முதல்முறையாக சத்யராஜுடன் இணைந்து நடிக்க உள்ளார். மேலும் இதில் சூர்யாவுக்கு தந்தையா, அல்லது வில்லனா என இப்போதே சத்யராஜ் கதாபாத்திரம் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

முன்னதாக பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தம்பி கார்த்திக் நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்திக்கு அப்பாவாக நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக சத்யராஜ் குணச்சித்திர நடிகர்களில் டாப் லிஸ்ட்டில் இருக்கிறார் என்பதும் கூடுதல் தகவல்.

suriya40-cinemapettai
suriya40-cinemapettai

சூர்யா 40 படத்தில் இதுவரை சூர்யா உடன் பணியாற்றிய நிறைய பேர் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகமாகியுள்ளது. மேலும் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பை தொடங்கி ஏப்ரல் மாதம் முடித்துவிட வேண்டுமென சன் பிக்சர்ஸ் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

Trending News