சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினி நடிப்பில் இன்றும் மறக்க முடியாத படமாக இருப்பது முத்து. இன்று சன் டிவியில் போட்டாலும் இந்த படத்தை பார்க்க தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
தனிப்பட்ட ரசிகர்களையும் தாண்டி அனைத்துத்தரப்பு மக்களையும் கவர்ந்த திரைப்படமாகவும் முத்து அமைந்தது. கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய முத்து படம் அன்றைய காலகட்டத்தில் அதிக வசூல் செய்த படமாகவும், அதிக நாட்கள் தியேட்டரில் ஓடிய படமாகவும் அமைந்தது.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேரியரில் உள்ள முக்கிய திரைப்படங்களில் முதலாவது திரைப்படமாக முத்து இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு சூப்பர் ஹிட்டடித்த இந்த படத்தில் ரஜினிக்கு இணையான கதாபாத்திரம் சரத்பாபுவுக்கு கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து ரஜினிக்கு ஒரு பிளாஷ்பேக் காட்சி உண்டு. அதில் வயதான கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார். சில நேரங்கள் வந்தாலும் அந்த கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக அமைந்தது.
இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் நடிகர் வினுசக்கரவர்த்தி தானாம். ரஜினியின் பல படங்களில் காமெடி வேடங்களிலும் வில்லன் வேடங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.
மிகச்சிறந்த குணச்சித்திர நடிகரான வினுச்சக்கரவர்த்தி அந்த கதாபாத்திரத்தில் நடிக்காமல் போனது இன்றும் சிலருக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. ஒருவேளை அவர் நடித்திருந்தால் ரஜினியையும் அந்த காட்சியில் மிஞ்சியிருக்க வாய்ப்புண்டு.