வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

கமல் படத்தில் நடித்து அவருக்கு இணையாக பெயர் வாங்கிய ஒரே நடிகர் இவர்தான்.. கொம்பேறி மூக்கன் என்றால் சும்மாவா!

பன்முகத் திறமைகள் கொண்ட நடிகர்களில் ஒருவர் உலகநாயகன் கமலஹாசன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல் என அனைத்திலும் கலந்து கட்டியடிப்பவர். மேலும் கமல்ஹாசன் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் அவருக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்குமாறு பார்த்துக் கொள்வார் என அன்று முதல் இன்று வரை எழுதி வருகின்றனர்.

இவ்வளவு ஏன் கமலஹாசன், ரகுவரன் தன்னுடன் நடித்தால் தன்னையே மிஞ்சி விடுவார் என அவரை தன் பக்கம் சேர்த்துக் கொள்ளவில்லை எனவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. அதற்குக் காரணமும் கமலஹாசன் தான்.

பெரும்பாலும் கமல்ஹாசன் படங்களில் பணியாற்றும் இயக்குனர்கள் அவர் சொல்வதை மட்டும் தான் கேட்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். இதனால் சொந்தமாக எதுவும் செய்ய முடியாத நிலை. இப்படி பல இயக்குனர்கள் அடிபட்டுள்ளனர்.

kamal-cinemapettai-01
kamal-cinemapettai-01

இப்போதுகூட லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படக்கதையில் சில கோளாறுகளை கண்டுபிடித்து சொன்னதாக ஒரு செய்தி உள்ளது. இப்படிப்பட்ட கமல்ஹாசன் படத்தில் அவருக்கு இணையாக நடித்து பெயர் பெற்ற நடிகர் ஒருவர் இருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா.

அவர் வேறு யாரும் இல்லை. ரசிகர்களால் கொம்பேறி மூக்கன் என அன்போடு அழைக்கப்படும் நம்ம நாசர் தான். கமலஹாசன் நடிப்பில் பிசி ஸ்ரீராம் இயக்கத்தில் 1995ஆம் ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்ற திரைப்படம் குருதிப்புனல். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து அர்ஜுன் நடித்திருந்தார்.

ஆனால் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நாசருக்கு மிகப்பெரிய பெயர் கிடைத்தது. சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்யை விட விஜய்சேதுபதிக்கு எப்படி பெயர் கிடைத்ததோ அதே தான் குருதிப்புனல் படத்திலும் நடந்தது.

kuruthipunal nasser-cinemapettai
kuruthipunal nasser-cinemapettai

Trending News