சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

கார்த்தியிடம் மட்டுமே இருக்கும் நல்ல குணம்.. பெருமிதமாக பேசிய பிரபலம்

சுல்தான் திரைப்படத்திற்கு பிறகு கார்த்தி தற்போது விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதில் விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்நிலையில் பிரபல நடிகர் நெப்போலியன், கார்த்தி குறித்து மிகவும் பெருமையாக ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் போன்ற கேரக்டரில் கலக்கி வந்த நெப்போலியன் தற்போது ஹாலிவுட் வரை பிரபலமாக இருக்கிறார்.

இவர் கார்த்தியுடன் இணைந்து சுல்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் நெப்போலியன் கார்த்திக்கு அப்பாவாக நடித்து இருப்பார். பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்தின் மூலம் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தில் கார்த்தியுடன் நடித்த அனுபவம் குறித்து நெப்போலியனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் மிகவும் சுவாரசியமான பதிலைக் கூறினார்.

இந்த திரைப்படத்தில் நான் நடித்தது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அதிலும் கார்த்தி ஒரு சிறந்த நடிகர். அது மட்டுமல்லாமல் அவருடைய நாகரிகமான குணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று அவரை வார்த்தைக்கு வார்த்தை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

மேலும் சுல்தான் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு நான் ஊருக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தபோது நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு கார்த்தி வந்தார். அப்போது அவர் இந்த படத்தில் நடித்ததற்காக எனக்கு நன்றி தெரிவித்து வழியனுப்பி வைத்தார். இப்படி ஒரு நாகரிகமான குணத்தை நான் வேறு எந்த நடிகரிடமும் பார்த்தது கிடையாது என்று நெப்போலியன், கார்த்தி குறித்து மிகவும் பெருமையாக பேசி இருக்கிறார்.

Trending News