சிம்பு தன்னுடைய ஈஸ்வரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய சில விஷயங்கள் பிரபல நடிகருக்கு கோபத்தை உண்டாக்கியதால் சிம்புவை வெளுத்து வாங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சிம்பு சினிமாவில் மிகவும் பிசியான ஹீரோவாக வலம் வருகிறார். ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். வருகிற பொங்கலுக்கு ஈஸ்வரன் படம் வெளியாக உள்ளது.
அதனைத் தொடர்ந்து மாநாடு மற்றும் பத்து தல போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் ஈஸ்வரன் படத்தின் வெளியீட்டு விழாவில் சிம்பு இனிமேல் சொல்லப் போறதில்லை, எல்லாமே செய்கைதான் என குறிப்பிட்டிருந்தார்.
அதுமட்டுமில்லாமல் விரைவில் கொரானாவை வெல்வோம் எனவும் வசனம் பேசி இருந்தாராம். இதனைக் கேள்விப்பட்ட பிரபல அரசியல்வாதியும் நடிகருமான கருணாஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் சிம்புவை திட்டியுள்ளார்.

சிம்புவுக்கு கொரானா வந்தால் தெரியும், நான் அதில் சிக்கி சின்னா பின்னமாகியிருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும் கொரானா என்ற நோயிடம் எதற்கு தேவையில்லாமல் சினிமா வசனம் பேச வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தியேட்டர்களில் 100 சதவிகிதம் பார்வையாளர்களை அனுமதிப்பதில் எவ்வளவு பெரிய சிக்கல் இருக்கிறது என்பது அவருக்கு தெரியும் எனவும் அடுக்கடுக்கான கேள்விகளை கருணாஸ் வைத்துள்ளார். இது சிலம்பரசன் ரசிகர்களை கோபப்படுத்திய உள்ளது.
ஒரு சினிமா நடிகராக இருந்துகொண்டு சினிமாவின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதை உணராமல்இப்படி பேசலாமா? என கருணாசை சிம்பு ரசிகர்கள் எதிர்க் கேள்வி கேட்டு வருகின்றனர்.