நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தான் வலிமை. இந்த படத்திற்கு தற்போது எதிர்பார்ப்புகள் உச்சத்தில் இருக்கின்றன.
மேலும் வலிமை படத்தில் இன்னும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கியுள்ள நிலையில் விரைவில் அதை முடிப்பதற்காக படக்குழுவினர் ஸ்பெயின் நாட்டுக்கு செல்ல உள்ளனர். மேலும் அதனுடன் மொத்த படப்பிடிப்பும் முடிவதாக செய்திகள் கிடைத்துள்ளன.
அதனைத் தொடர்ந்து இந்த வாரத்தில் பெரும்பாலும் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லது மோஷன் போஸ்டர் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து சினிமாவைச் சேர்ந்த பிரபலங்கள் கூறி வருகின்றனர்.
அந்த வகையில் தல அஜித்தின் தீவிர ரசிகரும் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் சமீபத்தில் தல அஜித் நடிக்கும் வலிமை படத்தின் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷாவுடன் பேசியதாகவும், அவர் வலிமையைப் பற்றி சில தகவல்களை பகிர்ந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
அதில் வலிமை படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகி வருவதாகவும், இதுவரை தமிழ் சினிமாவில் இப்படி ஒரு ஆக்ஷன் காட்சிகளை பார்த்திருக்க முடியாது என்கிற அளவுக்கு பிரமாண்டமாக உள்ளதாகவும் தெரிவித்தாராம்.
அதை தகவலை ஆர்கே சுரேஷ் சமீபத்தில் பகிர்ந்து கொண்டார். அந்த பதிவிற்கு தல அஜித் ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர். இவர் சொன்னது மட்டும் உண்மையாக இருந்தால் ஆர்கே சுரேஷுக்கு தல ரசிகர்கள் கோவில் கட்டி கும்பிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.