திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

ரெண்டு படம் ஹிட்டானா கமல்ஹாசன் நடவடிக்கையே மாறும்.. எழுதி வச்சுக்கங்க என்ற பிரபலம்

கமல்ஹாசன் தற்போது இரண்டு மாடுகளை பூட்டி வண்டி ஓட்டுவது போல சினிமா மற்றும் அரசியல் இரண்டையும் ஒன்றாக வைத்து தன்னுடைய பயணத்தை தொடங்கி உள்ளார். இது எங்கு போய் சேருமோ? என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

கமல்ஹாசன் அரசியலில் இறங்கி வெற்றியின் விளிம்பு வரை சென்று தோல்வியை தழுவி மீண்டும் சினிமா பக்கம் வந்து விட்டார். இருந்தாலும் அவ்வப்போது அரசியல்வாதி என்ற அடிப்படையில் ஏதாவது ஒரு கருத்தை சமூகவலைதளத்தில் சொல்லி வருகிறார்.

இது ஒருபுறமிருக்க அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் முதலாவதாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இந்த படத்தை முழுமூச்சில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம்.

இந்நிலையில் பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கமலஹாசனின் அடுத்த இரண்டு படம் வெற்றி பெற்றுவிட்டால் அரசியலை தூக்கி வீசி விட்டு முழுநேர நடிகராக மாறி விடுவார் எனக் கூறியுள்ளார்.

மேலும் சினிமாவில் உச்சம் தொட்டாலும் கமலஹாசன் அரசியலில் வெறும் முட்டைதான் எனவும் குறிப்பிட்டுள்ளார். பயில்வான் கூறியதை கமல்ஹாசன் ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.

இவர் சொல்வதைப் போல கமலஹாசன் மீண்டும் முழுநேர நடிகராக மாறிவிட்டால் அவர் ஆரம்பித்த கட்சியும், அவரை நம்பியிருக்கும் உறுப்பினர்களின் கதியும் என்ன ஆகுமோ. இது தெரிந்துதான் ஏற்கனவே இரண்டு பேர் ஆளும் கட்சியில் சேர்ந்து விட்டார்களோ?

kamal-bailwan-cinemapettai
kamal-bailwan-cinemapettai

Trending News