சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சினிமா வரலாறு பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. எங்கேயோ தொடங்கி ஒரு சகாப்தத்தையே உருவாக்கி வைத்துள்ளார். ரஜினி மட்டும்தான் 70 வயதிலும் நம்பர் ஒன் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ரஜினிகாந்த் ஆரம்ப காலகட்டங்களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து சில படங்களில் நடித்தார். இருந்தாலும் காலத்தின் கட்டாயம் சில கமர்சியல் படங்களில் நடித்தார். பிற்காலத்தில் அதுவே அவருக்கு கமர்ஷியல் நாயகனாக வலம் வர வழி வகுத்தது.
அன்று முதல் இன்று வரை பக்கா கமர்சியல் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் சினிமா கேரியர் ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு இயக்குனர்களால் மெருகேற்ற பெற்றது. அந்த வகையில் ரஜினியின் திரை வரலாற்றில் இயக்குனர் ஷங்கருக்கு மிகப் பெரிய பங்கு உண்டு.
சங்கர் மற்றும் ரஜினி கூட்டணியில் வெளியான சிவாஜி, எந்திரன், 2.O போன்ற படங்கள் அனைத்துமே வசூல் சாதனைகள் செய்தது. ஷங்கர் மற்றும் ரஜினி இணையும் படத்தில் சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் முன்னணி நடிகர்கள் பலரும் நடிக்க ஆர்வமாக இருப்பார்கள். ரஜினி படங்களில் எப்போதுமே வில்லனுக்கு பெரிய முக்கியத்துவம் இருக்கும்.
அந்த வகையில் சிவாஜியில் ஆதிசேஷன், எந்திரன் படத்தின் ப்ரொஃபஸர் போரா போன்றோரைச் சொல்லலாம். ஆனால் இந்த இரண்டு கதாபாத்திரங்களிலும் நடிக்க முதன் முதலில் தேர்வு செய்யப்பட்ட நடிகர் சத்யராஜ் தான்.
ஆனால் ரஜினிக்கும் அவருக்கும் சின்ன மனக்கசப்பு இருந்ததாகவும் அதன் காரணமாகத்தான் இந்த இரண்டு படங்களிலும் நடிக்க மாட்டேன் என சத்யராஜ் பிடிவாதம் பிடித்ததாகவும் அன்றைய காலகட்ட பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தது. ஒருவேளை சத்யராஜ் இந்த கதாபாத்திரங்களில் நடித்திருந்தால் அந்த கதாபாத்திரம் வரவேற்பை பெற்றிருக்குமா? என்பதை ரசிகர்கள் கமெண்டில் பதிவு செய்யலாம்.