வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சரிந்தது இமயம்.. விஜயகாந்த் காலமானார், மீளா துயரில் திரையுலகம்

Vijayakanth Passed Away: இன்று காலை இப்படி ஒரு துயர செய்தியை கேட்போம் என்று நாம் கனவில் கூட நினைத்திருக்க மாட்டோம். திரை உலகிற்கு பெருமையாக விளங்கிய கேப்டன் விஜயகாந்த் இன்று நம்மை மீளா துயரில் தவிக்க விட்டு சென்றுள்ளார்.

உடல் நல பாதிப்பின் காரணமாக கடந்த சில வருடங்களாக அவதிப்பட்டு வந்த அவர் இன்று இறைவனடி சேர்ந்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்பினார். ஆனால் நேற்று அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் இது வழக்கமான சிகிச்சை தான் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. அதைத்தொடர்ந்து இன்று காலை அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளிவந்தது.

Also read: மீண்டும் மருத்துவமனையில் விஜயகாந்த்.. பதறிப்போன தொண்டர்கள், தேமுதிக வெளியிட்ட அறிக்கை

இதனால் அதிர்ச்சி அடைந்த தொண்டர்களும், ரசிகர்களும் அவர் மீண்டு வர வேண்டும் என பிரார்த்தித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காத நிலையில் விஜயகாந்த் தற்போது மரணம் அடைந்துள்ளார். அவருடைய உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவருடைய இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சி செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அரசியல் வரலாற்றில் புது சரித்திரத்தை படைத்த விஜயகாந்தின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.

Also read: விஜயகாந்துக்கு கொரோனா, மூச்சு விடுவதில் சிரமம்.. வெளியான அறிக்கையால் பரபரப்பில் திரையுலகம்

Trending News