வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

அஜித்தின் 2 படத்தை ரீமேக் செய்யும் ஒரே நடிகர்.. தல படம்தான் அவருக்கு செட் ஆகுதாம்

தல அஜித் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் தான் மற்ற மொழி படங்கள் அதிகமாக ரீமேக் செய்யப்பட்டன.

ஆனால் காலம் கடந்து விட்டது. தமிழில் சூப்பர் ஹிட் அடிக்கும் படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தமிழ் படங்கள் நிறைய ரீமேக்காகி வருகிறது.

அந்த வகையில் அஜீத் நடிப்பில் உருவான இரண்டு படங்களை ஒரே நடிகர் வாங்கி ரீ-மேக் செய்து நடிக்க உள்ளார் என்ற செய்தி தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித் படங்களுக்கு தெலுங்கில் மவுசு கூடி வருகிறது என்றும் சொல்லலாம்.

கடைசியாக கூட அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை பவன்கல்யாண் வக்கீல் சாப் என்ற பெயரில் ரீமேக் செய்தார். அந்த படம் அங்கு வசூலில் சக்கை போடு போட்டது. அதனைத் தொடர்ந்து அஜித்தின் வேதாளம் மற்றும் என்னை அறிந்தால் ஆகிய இரண்டு படங்களும் ரீமேக் செய்யப்பட உள்ளன.

அந்த இரண்டு படங்களையும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவி ரீமேக் செய்ய உள்ளார். அதில் ஏற்கனவே வேதாளம் படத்தை போலா ஷங்கர் என்ற பெயரில் ஆரம்பித்து விட்டனர். தமிழில் அஜித்துக்கு தங்கையாக லட்சுமி மேனன் நடித்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நடிக்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து அஜித் மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற என்னை அறிந்தால் படத்தையும் ரீமேக் செய்ய உள்ளாராம் சிரஞ்சீவி. இவர் ஏற்கனவே விஜய்யின் கத்தி படத்தை ரீமேக் செய்துதான் தெலுங்கு சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார் என்பதும் கூடுதல் தகவல்.

chiranjeevi-cinemapettai
chiranjeevi-cinemapettai

Trending News