வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

மகள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய அம்மாவின் பேராசை.. சொல்ல முடியாமல் தவிக்கும் நடிகர்

என்னதான் உச்ச நடிகராக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கை அவருக்கு நிம்மதியை கொடுக்கவில்லை. அதனாலேயே இப்போது அவர் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி சோகத்தை மறைத்து வருகிறார்.

இதற்கு முக்கிய காரணம் நடிகரின் மனைவி தான். ஆரம்பத்திலேயே பணத்தின் மீது குறியாக இருந்த அவர் இப்போது மகள் வாழ்வையும் கேள்விக்குறி ஆக்கிவிட்டார்.

மூன்றெழுத்து நடிகரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த மகள் சட்ட ரீதியாக அவரை பிரிய முடிவெடுத்து விட்டார். சுற்றியுள்ள சொந்தங்கள் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லையாம்.

ஏனென்றால் நடிகரின் போக்கு அப்படி. தன் இஷ்டப்படி ஜாலி பண்ணி வந்த நடிகர் பற்றி பல கிசுகிசு வந்திருக்கிறது. அதுதான் இந்த பிரிவுக்கு பின்னணி காரணமாக உள்ளது.

ஆனால் அதையும் தாண்டி மகளுக்கு சொத்தை பிரித்து கொடுத்தால் மருமகன் அழித்து விடுவார் என்று பயந்து இருக்கிறார் தாய்குலம். அதனாலயே மகளின் முடிவை அவர் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டாராம்.

சமாதானம் பேச வந்த சம்மந்தி வீட்டுக்காரர்களைக் கூட அவர் அவமதித்திருக்கிறார். இதுதான் பிரச்சினையை வேறு திசையில் திருப்பி விட்டிருக்கிறது. தற்போது மகள் வாழ்க்கையை நினைத்து நடிகர் தான் நொந்து போய் இருக்கிறாராம்.

Trending News