வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

இயக்குனர் வீட்டு விசேஷத்திற்கு தனியாக வந்த நடிகரின் மனைவி.. அப்ப அதெல்லாம் உண்மை தானா.?

பிரம்மாண்ட இயக்குனர் தன்னுடைய மகள் வாழ்க்கையை நினைத்து ரொம்பவும் நொந்து போயிருந்தார். ஆனால் இப்போது எப்படியோ பொண்ணுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்துவிட்டார்.

அந்த விசேஷத்திற்கு கோலிவுட் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகமும் கலந்து கொண்டது. அதில் ஹைலைட்டாக இருந்த விஷயம் மாஸ் ஹீரோவின் மனைவி வந்தது தான்.

நீண்ட நாட்களாகவே இவர்கள் வீட்டு பஞ்சாயத்து மீடியாவில் பயங்கரமாக பேசப்பட்டு வந்தது. இருவருக்கும் ஒரு நடிகையால் சண்டை, விவாகரத்து ஆகிவிட்டது என்றெல்லாம் கிசுகிசுக்கப்பட்டது.

அதற்கு ஏற்றது போல் நடிகரும் பல விழாக்களுக்கு தனியாகத்தான் வந்தார். இப்போது பார்த்தால் அவருடைய மனைவியும் தனியாக வந்திருக்கிறார்.

அப்ப இதெல்லாம் உண்மைதானா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அதிலும் நடிகரின் மனைவி தோழிகளுடன் அந்த விசேஷத்தை நன்றாக என்ஜாய் செய்திருக்கிறார்.

எப்போதும் சிம்பிளாக இருக்கும் இவர் அந்த விழாவில் நல்ல அலங்காரத்தோடு இருந்தார். முகத்தில் கொஞ்சம் கூட வருத்தமோ கவலையோ இல்லை.

இதையெல்லாம் பார்த்த நடிகரின் ரசிகர்கள் இப்போது ஆழ்ந்த கவலையில் இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த விஷயம் தற்போது மீடியாக்களுக்கு சரியான தீனியாக மாட்டியிருக்கிறது.

Trending News