திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கண்ணம்மாவாக நடிக்க மாட்டேன் என தெறித்து ஓடிய நடிகைகள்.. 2 குழந்தைக்கு அம்மாவா வேற.!

விஜய் டிவி பல புதுமையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி அதன் மூலம் மக்களை அதிக அளவில் கவர்ந்து வருகிறது. அதில் அனைவரும் விரும்பிப் பார்க்கும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.

இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் ரோஷினிக்கு பல ரசிகர்கள் இருந்தனர். அதில் அவருடைய யதார்த்தமான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வந்தது. அப்படியிருக்கும் போது ரோஷினி சில காரணங்களால் பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்தார்.

அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்ததால் தான் சீரியலை தொடர முடியவில்லை என்று காரணம் சொல்லப்பட்டது. அதுபோல தற்போது மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்ற ஜெய்பீம் மற்றும் சார்பட்டா பரம்பரை போன்ற திரைப்படங்களில் நடிக்க முதலில் ரோஷினியை அணுகியுள்ளனர்.

ஆனால் சிறிது யோசித்து முடிவு செய்யலாம் என்று அந்த வாய்ப்புகளை ரோஷினி புறக்கணித்துள்ளார். அதன் பிறகு தற்போது பல பெரிய பேனர்கள்களில் இருந்து ரோஷினிக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வருகிறது.

ரோஷினி சீரியலில் இருந்து விலகுவதை ஏற்றுக்கொண்ட விஜய் டிவி நிர்வாகம் அவருக்கு பதில் பல நடிகைகளை அம்மாவாக நடிக்க அணுகியுள்ளது. அதில் முதலில் அணுகியது தற்போதைய கண்ணம்மா வினுசா தேவியை தான். அவர் ரோஷினியின் உருவ ஒற்றுமையுடன் இருப்பது தான் அதற்கு முக்கிய காரணம்.

ஆனால் வினுசா தேவி முதலில் இந்த வாய்ப்பை மறுத்துள்ளார். அவரைத் தொடர்ந்து படக்குழுவினர் ஜீ தமிழ் சீரியல் நடிகைகள் ரேஷ்மா, நட்சத்திரா போன்றோரை அணுகியுள்ளது. ஆனால் அவர்கள் வேறு சீரியலில் கமிட் ஆகியது ஒரு காரணமாக இருந்தாலும், இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க விரும்பாமல் தான் அவர்கள் இந்த வாய்ப்பை புறக்கணித்துள்ளனர்.

அதன்பிறகு பிக்பாஸ் டைட்டில் வின்னர் நடிகை ரித்விகாவுக்கு இந்த வாய்ப்பு சென்றுள்ளது. ஆனால் அவரும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க விரும்பாமல் மறுத்துள்ளார். இதனால் படக்குழு மீண்டும் வினுசா தேவியை சமாதானம் செய்து கண்ணம்மாவாக நடிக்க வைத்துள்ளனர்.

மிகவும் பிரபலமான இந்த கண்ணம்மா கேரக்டரை இவ்வளவு நடிகைகள் மறுத்து உள்ளனர் என்ற செய்தி பாரதி கண்ணம்மா ரசிகர்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending News