வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஆடம்பர பங்களாவை வாங்கிய உயர்ந்த நடிகை.. வாய்ப்பே இல்லைனாலும் காஸ்ட்லியா சொத்து சேர்க்கும் அம்மணி

ஒரு காலத்தில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த அந்த உயர்ந்த நடிகைக்கு இப்போது சுத்தமாக வாய்ப்புகள் இல்லை. அதுவும் கடைசியாக அவர் நடித்த படங்கள் எல்லாம் தோல்வி தான்.

அதனாலேயே அவர் முரட்டு நடிகரை கைக்குள் வைத்துக்கொண்டு சில படங்களை கைப்பற்றினார். ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்த நிலையில் அம்மணி கைவசம் இப்போது பெரிய படங்கள் எதுவும் இல்லை.

ஆனாலும் பணம் காசுக்கு எதுவும் குறையில்லை. தற்போது கூட நடிகை காஸ்ட்லியாக ஒரு பங்களாவை வாங்கி போட்டு இருக்கிறார். நகரின் மையத்தில் இருக்கும் அந்த வீட்டில் சகல வசதிகளும் இருக்கிறதாம்.

பல கோடி மதிப்புள்ள அந்த வீட்டை நடிகை எப்படி வாங்கினார் என்பது தான் ரகசியம். வாய்ப்பே இல்லாம இவ்வளவு காசு கொடுத்து வாங்கி இருக்கிறார் என்றால் பின்னணியில் ஏதோ இருக்கும் என இப்போது கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் கூட நடிகை ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டி வந்தார். அதை தொடர்ந்து தற்போது சொத்துக்களாக வாங்கி போட்டு வரும் இவரை பற்றிய பேச்சு தான் இப்போது திரை உலகின் சூடான செய்தியாக இருக்கிறது.

Trending News