புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நான் தான் நம்பர் ஒன் என தலையில் கொம்போடு அலைந்த நடிகை.. அழுது புலம்ப வைத்த கீர்த்தி சுரேஷ்

Keerthy Suresh: கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் மாமன்னன் படம் வெளிவந்தது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு ஆகியோர் நடித்திருந்த அப்படம் சில விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக தல தப்பியது. அதைத் தொடர்ந்து தற்போது கண்ணிவெடி என்ற படத்தில் லீட் ரோலில் நடிக்க கீர்த்தி கமிட்டாகி இருக்கிறார்.

இது மட்டுமல்லாமல் இன்னும் பல வாய்ப்புகள் அவரைத் தேடி குவிந்து கொண்டிருக்கிறதாம். மேலும் பாலிவுட்டில் அட்லியின் தயாரிப்பில் அறிமுகமாகவும் இருக்கிறார். விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தான் கீர்த்தி சுரேஷ் சமந்தா கேரக்டரில் நடிக்க உள்ளார்.

Also read: அட்லீயை பயன்படுத்தி சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்.. படமே ஓடல, இதுல இது வேறயா என ஓட்டம் பிடிக்கும் முதலாளி

இந்த விஷயம் தற்போது ஒரு நடிகையின் வயிற்றில் தீயை பற்ற வைத்திருக்கிறது. அதாவது இப்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ராஷ்மிகாவுக்கு மவுசு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த ரசிகர்களின் கிரஷ் நடிகை என்ற பெயரும் இவருக்கு உள்ளது.

மேலும் டாப் ஹீரோக்கள் எல்லாம் இவரை ஜோடியாக போட விரும்புவதால் அம்மணிக்கு தலையில் கொம்பு வைத்தது போல் ஆகிவிட்டது. அதனால் ஓவர் ஆட்டம் ஆடி வந்த இவருக்கு சரியான ஆப்பு கிடைத்திருக்கிறது. அதாவது இந்த தெறி படத்தில் ராஷ்மிகா தான் முதலில் நடிக்க இருந்தாராம்.

Also read: கண்ணிவெடி வைக்கப் போகும் கீர்த்தி சுரேஷ்.. அறிவிப்புடன் வெளியான புகைப்படம்

ஆனால் அம்மணியின் ஓவர் ஆட்டத்தால் இந்த வாய்ப்பு கைநழுவி போயிருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஹிந்தியில் இவர் கைவசம் ஒரு படம் தான் இருக்கிறது. மேலும் தமிழ், தெலுங்கில் புது படங்களும் வருவது குறைந்து விட்டதாம். இதற்கு முக்கிய காரணம் பாலிவுட் பக்கம் போய் தென்னிந்திய படங்களை அவர் தாறுமாறாக குறை சொன்னது தான்.

அதன் காரணமாகவே தற்போது வாய்ப்பு இல்லாமல் இருக்கும் இவர் உள்ளதும் போச்சே என்று புலம்பித் தவிக்கிறாராம். அது மட்டுமல்லாமல் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று கடும் அப்செட்டில் வேறு உள்ளாராம். அந்த வகையில் நான் தான் நம்பர் ஒன் என தலையில் கொம்போடு அலைந்த இவரை இப்படி புலம்ப வைத்து கீர்த்தி சுரேஷ் டாப் இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்.

Also read: கோடிகளில் கல்லா கட்டும் கீர்த்தி சுரேஷ்.. முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Trending News