சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

விஜய்க்காக இதைக் கூட அட்ஜஸ்ட் பண்ண மாட்டனா? தளபதிக்காக தாராளம் காட்டிய 30 வயது நடிகை

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள திரைப்படம் தளபதி 65. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

தளபதி 65 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் தற்போது ஜார்ஜியா நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது. விஜய் சட்டமன்ற தேர்தலுக்கு ஓட்டுப் போட்டுவிட்டு அன்றிரவே ஜார்ஜியா நாட்டிற்கு கிளம்பினார்.

அந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது ஜார்ஜியா நாட்டில் விஜய் வந்து இறங்கிய புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒருபுறமிருக்க விஜய்யுடன் முதல்முறையாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை பூஜா ஹெக்டே ஜோடி போட்டுள்ளார். இவர் பல வருடங்களுக்கு முன்பு மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் நடித்திருந்தாலும் அந்த படம் பெரிய அளவு வெற்றியை பெறாததால் தமிழ் சினிமாவில் கவனம் பெறத் தவறினார்.

இந்நிலையில் நீண்ட நாட்களாகவே தமிழ் சினிமாவில் ஒரு பெரிய நடிகரின் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க வேண்டும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது போலக் கிடைத்தது தளபதி 65 பட வாய்ப்பு.

தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டதால் தளபதி 65 படத்திற்கு தேதிகள் ஒதுக்கமுடியாமல் தடுமாறினாராம் பூஜா ஹெக்டே. இருந்தாலும் விஜய் பட வாய்ப்பை விட்டு விடக்கூடாது என விஜய்க்காக தேதிகளை ஒதுக்கி கொடுத்துள்ளாராம். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத சன் பிக்சர்ஸ் நிறுவனம் பூஜா ஹெக்டே பேசிய 3 கோடி சம்பளத்தை எந்த ஒரு பேரம் பேசாமல் அப்படியே கொடுத்து விட்டாதாம்.

pooja-hegde-thalapathy65
pooja-hegde-thalapathy65

Trending News