திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

3வது திருமணத்துக்குத் தயாராகும் நடிகை.. இயக்குனருடன் ஏற்பட்ட திடீர் காதல்

வேறு மொழியில் இருந்து வந்திருந்தாலும் தமிழ் ரசிகர்களை ரொம்பவே இம்ப்ரஸ் செய்தவர் தான் அந்த பிரபல நடிகை. தன்னுடைய துரு துரு நடிப்பாலும், துள்ளல் பேச்சாலும் முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்த நடிகைக்கு பிறகு சரிவர பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.

அதனால் வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்ட நடிகை சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்தார். வெளிநாட்டில் கணவருடன் குடும்பம் நடத்திக் கொண்டிருந்த நடிகை திடீரென கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தாய்நாட்டிற்கு திரும்பி வந்துவிட்டார்.

இப்போது மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டும் நடிகை சில திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார். மேலும் பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக இவர் தன்னுடைய கவர்ச்சி போட்டோக்களை சோசியல் மீடியாவில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

குடும்ப குத்து விளக்காக நடிகையைப் பார்த்த ரசிகர்கள் இப்படி அவரின் கிளாமர் போட்டோக்களை பார்த்து அதிர்ந்து போய் இருக்கின்றனர். இந்த வயதில் எதற்கு உங்களுக்கு இந்த வேண்டாத வேலை என்று சிலர் கூறி வந்தாலும் நடிகை தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை தற்போது மூன்றாவதாக ஒரு காதலில் விழுந்துள்ளார். அதாவது நடிகை பிரபல இசையமைப்பாளர் ஒருவரை முதலில் காதலித்தார். ஆனால் அது கைகூடாமல் போன நிலையில்தான் இரண்டாவதாக ஒருவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

தற்போது அந்த வாழ்விலும் சிக்கல் ஏற்படவே நடிகை மூன்றாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. நடிகை சமீபத்தில் நடித்த படத்தின் இயக்குனருடன் மிகவும் நெருக்கம் காட்டி வருகிறாராம். கூடிய விரைவில் இவர்களுடைய திருமண அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.

Trending News