திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

அவங்க தான் எனக்கு ரோல் மாடல்.. பிரபலத்தை அப்படியே காப்பி அடிக்கும் நடிகை

திரை உலகில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் அந்த நடிகை. முன்னணி நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகையும் அவர்தான். அந்த அளவுக்கு அவருக்கு திரையுலகில் மவுசு இருக்கிறது.

இதனால் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்று நடிகை தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி விட்டார். இருப்பினும் அவரை தங்கள் படங்களில் புக் செய்வதற்கு தயாரிப்பாளர்கள் தயாராகவே இருக்கின்றனர். இந்நிலையில் நடிகை சினிமா, அரசியல் என்று ஒரு ரவுண்டு வந்த அந்த பிரபலத்தை தான் ரோல் மாடலாக வைத்திருக்கிறாராம்.

பிரபல நடிகையாக இருந்த அவர் அரசியலில் நுழைந்து அங்கும் வெற்றி கண்டார். சிங்கப்பெண், இரும்பு பெண்மணி என்றெல்லாம் அவரை பலரும் கூறுவது உண்டு. அவரைப் போன்று இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நடிகை தற்போது அவர் வீட்டுக்கு பின்னாடியே பிரம்மாண்டமான வீட்டை கட்டிக் கொண்டிருக்கிறாராம்.

அவரைப் போலவே நடிகையும் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கிறார். வருங்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் கூட அவருக்கு இருக்கிறதாம். அதனால் தான் நடிகை தற்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி சேர்த்துக் கொண்டிருக்கிறாராம்.

இப்படி சம்பாதித்து அரசியலுக்கு தேவையான பணத்தை சேர்க்க வேண்டும் என்பதுதான் நடிகையின் முதல் திட்டமாம். அதைத்தொடர்ந்து ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து சீட்டு வாங்கி விட வேண்டும் என்று நடிகை இப்பவே திட்டம் போட்டு காய்களை நகர்த்திக் கொண்டிருப்பதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

Trending News