திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

திருமணமான ஒரு வருடத்திலேயே விவாகரத்து.. மீண்டும் சிங்கிளான பிரியமான நடிகை

இப்போதெல்லாம் ஹீரோயின்கள் திருமணம், விவாகரத்து என ரொம்ப ஸ்பீடாக இருக்கின்றனர். அதில் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் தான் சுவற்றில் அடித்த பந்து போல திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.

சமீபத்தில் திருமணம் ஆகி ஒரு மாதத்திலேயே கணவரை பிரிந்த நடிகை பெரும் சர்ச்சையை கிளப்பினார். அதை தொடர்ந்து தற்போது இளம் சீரியல் நடிகை ஒருவரும் தன் கணவரை பிரிந்து ஷாக் கொடுத்திருக்கிறார்.

பிரபல சேனலில் சக்கை போடு போட்ட சீரியல் மூலம் என்ட்ரி ஆனவர் தான் இந்த பிரியமான நடிகை. குத்துவிளக்கு போல் இருக்கும் இவர் சீரியலில் படு ரொமான்டிக்காக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதை தொடர்ந்து சீரியல் முடிவுக்கு வந்த நிலையில் வேறு ஒரு சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.

Also read: ஹீரோ தலையில் மிளகாய் அரைத்த மனைவி.. வில்லன் நடிகருடன் காட்டும் நெருக்கம்

ஆனால் திடீரென திருமணம் செய்து கொண்டு சீரியலை விட்டு விலகிய நடிகை கணவருடன் வெளிநாட்டில் செட்டிலானார். மேலும் கணவரின் தொழிலையும் கவனித்து வந்தார். இதை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் கூட அவர் அடிக்கடி பகிர்வதுண்டு.

ஆனால் இப்போது நடிகை தன்னுடைய திருமண புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி இருக்கிறார். இதுதான் பெரும் குழப்பத்தை கொடுத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஒரு ரசிகர் நீங்கள் சிங்கிளா? என்று கேட்டதற்கு ஆம் என்று கூறி சந்தேகத்தை உறுதி செய்து இருக்கிறார்.

திருமணமான ஒரு வருடத்திலேயே விவாகரத்தா? எதற்கு இந்த பிரிவு? என ரசிகர்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனாலும் நடிகை தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் அமைதி காத்து வருகிறார்.

Also read: தொழிலதிபரை ஏமாற்றிய நடிகை.. வசமாக சிக்கிய சம்பவம்

Trending News