செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

காதலுக்கு வயசு கிடையாது.. 9 வயது குறைந்த தொழிலதிபரை கைப்பிடிக்கும் ஆன்ட்டி நடிகை

Gossip: அக்கட தேசத்தில் பிரபலமாக இருக்கும் நடிகை சமீபத்தில் முத்தின கத்திரிக்காய் ஹீரோவுடன் இணைந்து பிரம்மாண்ட படத்தில் நடித்தார். ஆனால் அது சரியாக போகாத நிலையில் நடிகைக்கு மார்க்கெட் கொஞ்சம் டல் அடித்து வருகிறது.

பெரிய பெரிய விருதுகளை வாங்கி இருக்கும் இந்த நடிகை சமீப காலமாகவே ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறார். அதாவது 34 வயதாகும் நடிகை தன்னைவிட 9 வயது குறைந்த தொழிலதிபர் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்.

இருவரும் அடிக்கடி ஜோடியாக செல்லும் புகைப்படங்களும் அவ்வப்போது மீடியாவில் சிக்கி வந்தது. ஆனால் நடிகையோ அதை பற்றி எல்லாம் கவலையும் படவில்லை விளக்கமும் கொடுக்கவில்லை.

புளியங்கொம்பாக பிடித்த ஹீரோயின்

தற்போது கசிந்துள்ள தகவலின் படி நடிகை தன் காதலனை ரகசிய நிச்சயதார்த்தம் செய்துவிட்டாராம். விரைவில் இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு முன்னதாக நடிகை முரட்டு சிங்கிள் நடிகருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். அடிக்கடி இவர்கள் தனிமையில் சந்திப்பதாகவும் விரைவில் திருமண செய்தி வரும் என்று கூட பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் அவர்கள் ஜோடியாக நடித்து வரும் படத்திற்கு இது இலவச புரமோஷன் ஆக இருக்கட்டும் என இருவருமே சைலன்டாக இருந்தனர். ஆனால் படம் மொக்கை வாங்கிய நிலையில் நடிகை இப்போது செட்டிலாக தயாராகி விட்டார்.

இளம் வயது பிரபலத்தை கைபிடிக்கும் நடிகை

Trending News