வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மாமனார், மருமகனுக்குள் நடக்கும் போட்டா போட்டி.. தலைவர் 170-ல் இணைந்த கேரளத்து பைங்கிளி

Thalaivar 170: இப்போது எங்கு திரும்பினாலும் சூப்பர் ஸ்டாரின் அலப்பறையாக தான் இருக்கிறது. ஜெயிலர் படம் வெளிவருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ரசிகர்கள் அதை ஒரு திருவிழாவாக கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர்.

இப்படி ஜெயிலர் ஒரு பக்கம் எதிர்பார்ப்பை கிளப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் தலைவர் 170 படமும் சத்தம் இல்லாமல் சர்ப்ரைஸ்களை கொடுப்பதற்கு தயாராகி வருகிறது. அந்த வகையில் முத்துவேல் பாண்டியன் கேரக்டரில் இருந்து வெளிவந்துள்ள சூப்பர் ஸ்டார் அடுத்த அவதாரத்திற்கு தயாராகி விட்டார்.

Also read: 500 கோடி கொடுத்தாலும் உன் படத்துல நடிக்க முடியாது.. ஜெயிலர் மீது செம கடுப்பில் இருக்கும் விஜய்

இதற்காக தன்னுடைய லுக்கை மாற்றி இருக்கும் சூப்பர் ஸ்டாரை பற்றிய பேச்சு தான் இப்போது சோஷியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. மேலும் தலைவர் 170ல் இணைந்திருக்கும் பிரபலங்கள் பற்றிய விவரமும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஏற்கனவே அமிதாப்பச்சன் இதில் இணைந்திருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது தெலுங்கு, மலையாள பிரபலங்களையும் லைக்கா இந்த கூட்டணியில் இணைத்து இருக்கிறது. அதன்படி நானி, பகத் பாசில், மஞ்சு வாரியர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

Also read: ஜெயிலர் படம் எல்லாம் சும்மா ட்ரைலர் தான்.. தலைவர்-170 யில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா?

இதில் கேரளத்து பைங்கிளி மஞ்சு வாரியர் இணைந்த செய்தி தான் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் அவர் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இருந்தால் மட்டும்தான் ஒரு படத்தில் நடிக்க சம்மதிப்பார். அப்படி இருக்கும் போது இப்படத்தில் பல நட்சத்திரங்கள் இருக்கின்றனர். இருப்பினும் அவர் நடிக்க சம்மதித்திருக்கிறார் என்றால் நிச்சயம் அவருக்கு வெயிட்டான கதாபாத்திரமாக தான் இருக்கும் என்று தெரிகிறது.

இது ஒரு புறம் இருந்தாலும் தனுஷ், ரஜினிக்குள் நடக்கும் போட்டா போட்டியும் இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. ஏற்கனவே சிவராஜ்குமார் ஜெயிலர் மற்றும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்தது பெரிதாக பேசப்பட்டது. அந்த வகையில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மஞ்சு வாரியர் ரஜினியுடன் இணைந்திருப்பது இவர்களுக்குள் நடக்கும் போட்டியை அம்பலப்படுத்தி இருக்கிறது.

Also read: எங்க சிங்கத்தை அசிங்கப்படுத்திட்டியே நெல்சா.. ஜெயிலர் வீடியோவை பார்த்துட்டு கொத்து பரோட்டா போட்ட பயில்வான்

 

Trending News