வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

11 வருடம் கழித்து மீண்டும் சிம்புவுடன் இணையும் பிரபல நடிகை.. இந்த வாட்டி ரொமான்ஸ் கொஞ்சம் தூக்கல் தான் போல!

சிம்பு சமத்து பையனாக தற்போது தமிழ் சினிமாவில் வலம் வருவதால் தொடர்ந்து அவருக்கு பல தயாரிப்பாளர்கள் பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் அடுத்ததாக மாநாடு படம் வெளியாக உள்ளது.

மேலும் ராம் இயக்கத்தில் ஒரு புதிய படம், வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் கௌதம் மேனன் படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். உடல் எடையை குறைத்து சிம்பு மீண்டும் தன்னுடைய பழைய தோற்றத்திற்கு வந்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.

ஈஸ்வரன் படம் வெளியாகி முதலுக்கு மோசம் இல்லை என்று ஓடிய நிலையில் அடுத்தடுத்து சிம்புவின் படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. மாநாடு படத்தின் டீசர் கூட சமீபத்தில் வெளியாகி வைரலானது. தற்போது அதனைத் தொடர்ந்து மீண்டும் கௌதம் மேனன் கூட்டணியில் சிம்பு இணைந்தது ரசிகர்களிடையே குத்தாட்டம் போட வைத்தது.

மேலும் அந்த படத்தில் சிம்புவின் முன்னாள் காதலி நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. தற்போது அது சம்பந்தமாக தயாரிப்பு தரப்பு நயன்தாராவிடம் பேசியபோது நயன்தாரா இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் பழைய குருடி கதவை திறடி என மீண்டும் கௌதம் மேனன் திரிஷா வசம் தஞ்சம் அடைந்துள்ளாராம்.

சிம்பு மற்றும் திரிஷா கூட்டணியில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமோ? என ஏற்கனவே ரசிகர்கள் சந்தேகத்தில் உள்ள நிலையில் திரிஷாவை கேட்டதிலிருந்து அது கன்ஃபார்ம் ஆகிவிட்டது.

simbu-trisha-cinemapettai
simbu-trisha-cinemapettai

இருந்தாலும் கௌதம் மேனன் தரப்பில் இது விண்ணைத்தாண்டி வருவாயா 2 இல்லை எனவும் புதுமாதிரியான ஸ்கிரிப்ட் எனவும் கூறி வருகிறாராம். எது எப்படியோ, கௌதம் மேனனும் சிம்புவும் கம்பேக் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் இந்த படம் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என இப்போதே கோலிவுட்டில் டாக் அதிகமாகிவிட்டதாம்.

Trending News