எப்படியாவது தளபதி விஜய்யின் பட வாய்ப்பை பெற்று விட வேண்டும் என தூண்டில் போட்டுக் கொண்டிருந்த இளம் நடிகை ஒருவருக்கு கடைசியில் சிவகார்த்திகேயன் புதிதாக நடிக்கும் பட வாய்ப்பு தான் கிடைத்துள்ளதாம்.
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர் விஜய். இன்று சினிமாவுக்கு வரும் இளம் நடிகைகள் கூட தளபதி விஜய்யுடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்ற கனவில் இருந்து வருகின்றனர். பல நடிகைகள் தான் பங்குபெறும் பேட்டிகளில் கூட நேரடியாக தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் தளபதி விஜய்யின் அடுத்த படமான பீஸ்ட் படத்திற்கு அவருடன் ஜோடியாக நடித்த தெலுங்கு சினிமாவில் பல நடிகைகள் போட்டி போட்டனர். அதில் பூஜா ஹெக்டே ஒருவழியாக விஜய் படத்தை ஓகே செய்தார்.
மேலும் பீஸ்ட் படத்தை கைப்பற்றும் முயற்சியில் இன்னொரு முன்னணி நடிகையும் இருந்தார். அவர் வேறு யாருமல்ல. நம்ம ரஷ்மிகா செல்லகுட்டி தான். விஜய்யின் தீவிர ரசிகை. பாலிவுட் முதல் கோலிவுட் வரை எந்த டிவி, யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தாலும் விஜய்யை பற்றி ஒரு வார்த்தையாவது பேசாமல் இருக்க மாட்டார்.
எப்படியாவது பீஸ்ட் படம் தனக்கு தான் கிடைக்கும் என ஆர்வமாக இருந்தார் ரஷ்மிகா. ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இடையில் சிவகார்த்திகேயன் தான் அடுத்ததாக நடிக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க ரஷ்மிகாவை ஒப்பந்தம் செய்துள்ளாராம்.
சிவகார்த்திகேயன் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஜதி ரத்னலு என்ற படத்தை இயக்கிய அனுதீப் என்பவர் இந்த புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிப்பதால் தெலுங்கிலும் இந்தப்படத்துக்கு நல்ல வியாபாரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.