ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

இனிமேலும் இப்படி அசிங்க பட முடியாது.. விஜய் டிவிக்கு கும்பிடு போட்டு ஜீ-தமிழ் கிளம்பிய நடிகை

விஜய் டிவியில் ஏகப்பட்ட தொகுப்பாளர்கள் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றனர். தமிழில் முன்னணி பெண் தொகுப்பாளினியாக இருக்கும் தொகுப்பாளினி அர்ச்சனா சன் டிவியில் இளமை புதுமை, காமெடி டைம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர். அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்டார்.

அதை தொடர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, கலக்கப்போவது யாரு, சாம்பியன்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பல ஆண்டுகளுக்குப் பின்பு விஜய் டிவிக்கு மீண்டும் வந்தார். இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் படத்தில் தனது மகள் சாராவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது விஜய் டிவியிலிருந்து அர்ச்சனா ஜீ தமிழ் செல்ல உள்ளார். எததற்காக அர்ச்சனா விஜய் டிவியை வெறுத்து ஜீ தமிழுக்கு சென்றுள்ளார் என ரசிகர்களிடம் பரபரப்பாக பேசப்படுகிறது. அர்ச்சனா முதலில் பிரபல ஜீ தமிழ் நிகழ்ச்சியான சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை தன் மகளான சாரா உடன் இணைந்து தொகுத்து வழங்கினார்.

அதன்பிறகுதான் விஜய் டிவிக்கு சென்றார். விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்த பிரியங்கா, பிக் பாஸ் சீசன 5 நிகழ்ச்சியில் பங்கேற்க கிளம்பியபோது அவரது இடத்தை அர்ச்சனா பிடித்து, பிரியங்கா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளை எல்லாம் அர்ச்சனா தான் மிக சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிரியங்கா வந்த பிறகு அர்ச்சனாவுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் பறிக்கப்பட்டது. இதனால் தற்போது மீண்டும் ஜீ தமிழ் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான சூப்பர் மாம் 2 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

மேலும் விஜய் டிவி நிகழ்ச்சி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அர்ச்சனாவை கிண்டல் செய்து வருவதாலும், விஜய் டிவியில் இருந்தால் மேலும் தனக்கு அவமானம் கிடைக்கும் என்பதால் ஜீ தமிழ் சென்றுள்ளார் என பலரும் கூறுகின்றனர்.

Trending News