அஜித் நடிப்பில் வெளியான படங்களில் இன்றும் அனைவராலும் கொண்டாடப்படும் திரைப்படம்தான் சிட்டிசன். சமீபத்தில்தான் சிட்டிசன் படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவு பெற்றதை சமூக வலைதளங்களில் தல ரசிகர்கள் கொண்டாடினர்.
இன்றும் ரசிகர்கள் அத்திப்பட்டி என சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்வதை பார்க்க முடிகிறது. அஜித்தின் சினிமா கேரியரில் இந்த படம் மறக்க முடியாத கால் தடத்தைப் பதித்தது.
2001 ஆம் ஆண்டு வெளியான சிட்டிசன் படத்தை சரவண சுப்பையா என்பவர் இயக்கியிருக்கிறார். தேவா இசையமைத்த இந்த படத்தை அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் ss சக்கரவர்த்தி தயாரித்திருந்தார்.
இந்த படத்தில் கதாநாயகியாக பாடகி வசுந்திரா தாஸ், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நக்மா நடித்திருந்தனர். நக்மா கூறும் நாயர் என்ற வசனம் இன்றும் மீம்ஸ் பக்கங்களில் பார்க்க முடிகிறது.

இப்படிப்பட்ட மிகப்பெரிய வெற்றிப் படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்து விட்டேன் என 42 வயதான சமீரா ரெட்டி சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். முதலில் தனக்கு தான் கதாநாயகி வாய்ப்பு வந்ததாகவும், அப்போது ஹிந்தியில் பிஸியாக இருந்ததால் இந்த படத்தை மிஸ் செய்து விட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பிறகு அஜீத் நடிப்பில் வெளியான அசல் படத்தில் சமீரா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிட வேண்டியது.