தமிழ் சினிமாவில் நிறைய நடிகர், நடிகைகள் அந்தந்த காலகட்டங்களில் முன்னணியில் இருக்கும் நடிகர்களின் படங்களை நம்பி தனக்கு வரும் நல்ல கதாபாத்திரங்களை இழந்துவிட்டு பின்னர் புலம்புவது வாடிக்கையாகிவிட்டது.
அந்த வகையில் அஜித்தின் காதல் கோட்டை படத்தை பிரபல நடிகை மிஸ் செய்துவிட்டாராம். அஜித்தின் சினிமா கேரியரில் மறக்க முடியாத படமாக அமைந்தது காதல் கோட்டை. அகத்தியன் இயக்கத்தில் தேசிய விருது வென்ற திரைப்படம்.
விருது வாங்கும் படங்கள் வசூலில் சாதிக்காது என்ற கருத்தை அடித்து நொறுக்கி பல இடங்களில் வசூல் வேட்டையாடியது காதல் கோட்டை. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தேவயானி நடித்திருந்தார். அஜித் மற்றும் தேவயானி இருவரும் சூர்யா, கமலி என்ற கதாபாத்திரங்களில் வாழ்ந்திருப்பார்கள்.
![kadhal-kottai-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/07/kadhal-kottai-cinemapettai.jpg)
இதில் தேவயானியின் வாய்ப்பு முதலில் விஜய்யின் பூவே உனக்காக படத்தில் அவரது ஒருதலை காதலியாக நடித்த அஞ்சு அரவிந்த் என்பவருக்குத்தான் கிடைத்ததாம். ஆனால் அதே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அருணாச்சலம் படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.
![anju-aravind-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/07/anju-aravind-cinemapettai.jpg)
அஜித்தை விட பெரிய நடிகர் ரஜினி என்பதால் அவரது படத்தில் நடிக்க ஆர்வமாக கிளம்பி விட்டாராம் அஞ்சு அரவிந்த். அதன் பிறகு காதல் கோட்டை படம் வெளியாகி தேவயானியின் கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை பார்த்து இப்படி ஒரு கதாபாத்திரத்தை மிஸ் செய்து விட்டோமே என வருத்தப்பட்டாராம். அதன் பிறகு அவ்வப்போது தமிழ் சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் முன்னணி நடிகை ரேஞ்சுக்கு அவரால் கடைசிவரை உயரவே முடியவில்லை.
இந்த தகவலை இயக்குனர் அகத்தியனே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். ஒருவேளை காதல் கோட்டை படத்தில் அஞ்சு அரவிந்த் நடித்திருந்தால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்திருப்பார் எனவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டதாம்.