சினிமாவுக்கு வரும் நடிகைகள் அனைவருமே அந்தந்த மொழிகளில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர்களுடன் ஜோடி போட்டு எப்படியாவது முன்னணி நடிகையாகி விடவேண்டும் என்ற கனவில் தான் வருவார்கள்.
அப்படி சினிமாவுக்குள் நுழைந்தவர் தான் கிரண். ஆரம்ப கட்டத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது மறுக்க முடியாதது. அதிலும் சுந்தர் சி இயக்கிய வின்னர் படத்தில் பிகினி உடையில் தோன்றி ரசிகர்களை பரபரக்க வைத்தார்.
கவர்ச்சி காட்டினால் மேலும் சில பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதுதான் சினிமாவின் நியதி. ஆனால் கிரணுக்கு அப்படியே மாறாக நடந்து விட்டது. பெரிய அளவு முன்னணி நடிகர்களின் கவனத்தை அவர் ஈர்க்கவில்லை.
சினிமாவுக்கு வந்த புதிதிலேயே மடமடவென படங்களில் நடிக்க ஆரம்பித்தவர் தான் கீரன். அந்த சமயத்தில் ரஜினி சொந்தமாக தயாரித்த பாபா படத்தின் ஹீரோயின் வாய்ப்பு கிரணை தேடிச் சென்றதாம்.
ஆனால் அந்த நேரத்தில் விக்ரமின் ஜெமினி படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் அந்த பட வாய்ப்பை தவற விட்டதாக குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு தற்போது வரை தன்னால் ரஜினியுடன் நடிக்க முடியவில்லை எனவும் புலம்பியுள்ளார்.
கிரண் தற்போது படவாய்ப்புகள் இல்லாததால் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் தனக்கென ஒரு செயலியை உருவாக்கி அதில் அளவுக்கு மீறிய கவர்ச்சி மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பணம் சம்பாதித்து வருகிறார்.
![kiran-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/07/kiran-cinemapettai.jpg)