ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 9, 2025

ஜனநாயகன் படத்தில் இணைந்த நடிகை.. பூஜா ஹெக்டேவுக்கு சரியான போட்டி தான்

Jana Nayagan: விஜய்யின் கடைசி படமாக உருவாகி வரும் ஜனநாயகன் படத்தை H வினோத் இயக்கி வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு இரண்டு போஸ்டர்களும் வெளியானது.

அதிலேயே படம் அரசியல் சார்ந்த கதை என்பது அனைவருக்கும் கெட்ட வெளிச்சமாகிவிட்டது. அதிலும் இரண்டாவது போஸ்டரில் விஜய் சாட்டையுடன் போஸ் கொடுத்திருந்தார்.

அதை எம்ஜிஆர் உடன் ஒப்பிட்டு ரசிகர்கள் வைரல் செய்து வந்தனர். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புலி படத்திற்கு பிறகு இவர் விஜய் உடன் இணைந்துள்ளார். ஏற்கனவே படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் ஸ்ருதியும் இணைந்துள்ளது சரியான போட்டிதான்.

ஜனநாயகன் படத்தில் இணைந்த நடிகை

மேலும் இதன் படப்பிடிப்பு பையனூரில் நடந்து வருகிறது. அங்கு விஜய் பங்கேற்கும் சண்டை காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த வருட தீபாவளிக்கு படம் வரும் என கணிக்கப்பட்டது. ஆனால் கடைசி படம் மரண மாஸாக இருக்க வேண்டும் என்பதால் பார்த்து பார்த்து எடுத்து வருகின்றனர்.

அதனால் ஜனநாயகன் அடுத்த பொங்கலுக்கு தான் வரும் என்ற கூடுதல் தகவல்களும் வந்துள்ளது. தேர்தல் நேரத்தில் வருவதால் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது.

Trending News